பொதுவாக கிரகங்கள் மாறும் பொழுது சுப அல்லது அசுப யோகங்களை உருவாகும்.
இவ்வாறு உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிகளிலுமே ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில், புதனும், சுக்கிரனும் சிம்ம ராசியில் ஒன்றிணைந்து பயணித்து வருகின்றனர்.
இவர்களுக்கு எதிராக சனி பகவான் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இதனால் சமசப்தம ராஜயோகம் உருவாகியுள்ளது.
சமசப்தக் ராஜயோகம் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவுள்ளது.அப்படியான ராசிகள் தொடர்பாக தெரிந்து கொள்வோம்.
சமசப்தம யோகத்தால் வரும் அதிர்ஷ்டம்
1. மேஷம்
- மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு ராஜயோகம் சிறப்பாக இருக்கும்.
- இதனால் நீண்ட ஆசைகள் இன்றைய தினம் நிறைவேற வாய்ப்பு இருக்கின்றது.
- அத்துடன் திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.
- இது போன்ற வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்க்கும் நல்ல காரியங்கள் அனைத்து கை சேரும்.
2. தனுசு
- இந்த ராசியில் பிறந்தவர்கள் ராஜயோகத்தால் அதிகமான வருமானம் பெறுவார்கள்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- பல நாள் கனவிற்காக இன்று முதல் உழைக்க ஆரம்பிப்பார்கள்.
- புதிய தொழில் துவங்கும் வாய்ப்பு இருக்கின்றது. இதனால் புது வணிகம் தொடர்பாக யோசிக்க ஆரம்பிப்பார்கள்.
3. மகரம்
- இன்றைய தினம் மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு ராஜயோகத்தால் மங்களம் உண்டாகும்.
- ஆரோக்கிய பிரச்சினைகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் மேம்படும்.
- பணிபுரியும் இடத்தில் பதவி உயர்வு, வருமானம் அதிகரிப்பு கைக்கூடும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
- நீங்கள் மாணவர்களாக இருந்தால் உங்கள் வாழ்க்கையில் நினைத்து பார்க்காத மாற்றத்தை காணலாம்.