மன மகிழ்ச்சிக்கு புத்த துறவிகள் பின்பற்றும் அரிய பழக்கங்கள்… நீங்களும் தெரிஞ்சிக்கணுமா?

பொதுவாக அனைவருக்குமே வாழ்வில் மகிழ்சியாகவும் மன நிம்மதியுடனும் இருக்க வேண்டும் என்று தான் ஆசை இருக்கும். ஆனால் அனைவராலும் இப்படி வாழ்ந்து விட முடிவதில்லை.

நீங்கள் உண்மையான அமைதியை தேடுபவராக இருந்தால், அதற்கு புத்த துறவிகள் பின்பற்றும் சில பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும். அதற்கான சில பழக்க வழக்கங்களை இங்கு பார்ப்போம்.

புத்த துறவிகள் பின்பற்றும் வழிகள்

பொதுவாகவே தியானமானது மனஅழுத்தத்தை குறைத்து மனதை அமைதியாகவும் மகிழ்சியாகவும் வைத்திருக்க பெரிதும் துணைப்புரிகின்றது. புத்த துறவிகள், இதனை உங்கள் அன்றாட நாட்களில் செய்வதால் தான் நிகழ்காலத்தில் முழுமையான கவனம் செலுத்தி மகிழ்ச்சியாக வாழ்வதாக குறிப்பிடுகின்றனர்.

அனைவரும் செல்வந்தர்களாக இருந்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற தவறான புரிதளுடன் இருக்கின்றார்கள். புத்த துறவிகளின் பார்வையில் எளிமையான வாழ்க்கையில் மகிழ்ச்சி இருக்கின்றது.

உண்மையில் மகிழ்ச்சி என்பது யாரோ ஒரு நபரிடமோ அல்லது பொருட்களிலோ தங்கியிருக்கும் விடயம் அல்ல. அது நமது மனதில தான் இருக்கின்றது. இந்த உண்மையை புரிந்துக்கொண்டால் வாழ்வில் அனைத்தையும் இழந்த நிலையிலும் கூட மகிழ்சியாக வாழமுடியும்.

இந்த உலகில் நமக்கு எந்த விடயமும் சொந்தம் கிடையாது. நாம் எதையும் எடுத்துக்கொண்டு பூமிக்கு வரவில்லை அது போல் இங்கிருந்து எதையும் எடுத்து செல்லவும் முடியாது எனவே முடிந்தவரையில் மகிழ்ச்சியான நினைவுகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.

மற்றவர்களுடன் அன்பாகவும் இரக்கத்துடனும் இருக்கும் பட்சத்தில் மனம் இயற்கையாகவே அமைதியடையும். கோபம் மற்றும் பொறாமை குரோதம் போன்ற தீய உணர்வுகளை நம்மிடமிருந்து அகற்றினால் மனம் தானகவே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கும்.

வாழ்க்கையில் நமக்கு கிடைத்திரக்கும் விடயங்களுக்கும் கிடைக்க போகும் விடயங்களுக்கும் எப்போதும் நன்றியுடன் இருக்க வேண்டும். இப்படி மனதில் நன்றியுணர்வு வந்துவிட்டால் குறைசொல்லும் குணம் தானாக அகன்று மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மனதை எப்போதும் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வைத்துக்கொள்ள இயற்கையுடன் அதிகம் நேரம் செலவிட கற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும் சுய கட்டுபாட்டுடன் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் தவறு என தோன்றும் விடயங்களை எந்த சூழ்நிலையிலும் செய்யாமல் இருந்தால் உங்கள் மீது உங்களுக்கே மிகுந்த மரியாதை உணர்வு ஏற்படும். இதனால் கிடைக்கும் மகிழ்சியை வார்க்தைகளால் புரிய வைக்க முடியாது.

மறக்காமல் இதையும் படியுங்க   சனி சூரியன் இணைப்பு: சிம்மாசனத்திற்கு தயாராகும் மூன்று ராசிகள் உங்க ராசி?
Shares