ஜோதிடத்தின்படி, மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளின் அதிபதியான செவ்வாய் பகவான் தற்போது ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். இந்த பெயர்ச்சி மிருகசீரிட நட்சத்திரத்தில் எதிர்வரும் ஆகஸ்ட் 16ம் திகதி முதல் நடக்கவிருக்கிறது.
இதனால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் சுப பலன்கள் பெற உள்ளனர். மற்ற கிரகங்களை விட செவ்வாய், ஒருவருக்கு வலிமை, ஆற்றல், செயலில் வேகத்தை கொடுக்கக்கூடியவர்.
அந்த வகையில் செவ்வாய் பெயர்ச்சியால் லாபம் அனுபவிக்கப் போகும் ராசியினர் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் செவ்வாய் பெயர்ச்சி
1. மேஷம்
- தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
- பணம், தொழில், வங்கி இருப்பு என பல விதத்தில் பணவரவு அதிகமாகும்.
- பல நாட்களாக காத்திருந்த வாய்ப்புகள் கிடைக்கும்.
- பணம் சம்பாதிப்பதற்கான பல வாய்ப்புகள் பெறுவீர்கள்.
- உங்களின் கனவு தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
- கடின உழைப்புக்கான முழு பாராட்டு பெறுவீர்கள்.
- பேச்சில் இனிமையும் அதன் நன்மையும் கிடைக்கும்.
2. சிம்மம்
- சிம்ம ராசியில் பிறந்தவர்கள் பல விதத்தில் நிதி நிலை முன்னேற்றம் காண்பார்கள்.
- தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்குச் சிறப்பு ஆதாயம் கிடைக்கும்.
- இந்த காலப்பகுதியில் வியாபாரத்தில் அசுர வளர்ச்சி அடைவீர்கள்.
- குடும்ப பிரச்சினைகள் நீங்கி, வாழ்க்கைத் துணையின் ஒருங்கிணைப்பு சிறப்பாக கிடைக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் வண்டி, வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை.
3. விருச்சிகம்
- செவ்வாய் பகவானின் அருளாள் விருச்சிக ராசியினரின் வாழ்க்கையில் பல வகையில் சாதகமான சூழல் அமையும்.
- முயற்சிகளில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய நிலை ஏற்படும். இப்படியான நேரங்களில் தயக்கம் இல்லாமல் வேலைச் செய்யுங்கள். வெற்றி உங்கள் பக்கம் நிச்சயம் கிடைக்கும்.
- இந்த காலத்தில் நெருப்பு, மின்சாரம் உள்ளிட்ட ஆபத்தான விஷயங்களில் அதிக கவனம் தேவை.
- நீண்ட காலமாக திருமணம் செய்யாமல் இருப்பவர்கள் இந்த காலப்பகுதியில் நல்ல வரன் கிடைக்கும்.
- திருமண வாழ்க்கையில் கோபத்தைக் கட்டுப்படுத்தி பொறுமையுடன் செயல்பட்டால் எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது.