ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்பகின்ற மாற்றமானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
இந்த வகையில் அனைத்து கிரகங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சூரிய பகவானுக்கு சாஸ்திரங்களில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சூரிய பகவான் இடப்பெயர்ச்சி அடைகின்றார்.ஆன்மாவின் ஆதாரம் என்று குறிப்பிடப்படும் கேது நட்சத்திரத்தில் சூரியனின் சஞ்சாரம் 14 நாட்களுக்குப் பிறகு மாற்றம் அடைகின்றது.
சூரிய பகவான் தனது மகனான சனியின் பூச நட்சத்திரத்தில் இருக்கின்றார். எதிர்வரும் ஆகஸ்ட் 16 ஆம் திகதி இரவு 07:53 மணிக்கு மக நட்சத்தில் சஞ்சாரம் செய்கின்றார்.
27 நட்சத்திரங்களின் பட்டியல் அடிப்படையில் பத்தாம் இடத்தில் காணப்படுவது மக நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது மற்றும் அதன் ராசி சிம்மம் ஆகும். இதன் காரணமாக, சூரிய பகவான் மக நட்சத்திரத்தில் இடப்பெயர்சி அடையும் போது அதன் பலன்கள் இரட்டிப்பாகும்.
குறித்த மாற்றம் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு வாழ்வில் மிகப்பெரும் திருப்பத்தை ஏற்படுத்துவதுடன் அதிஷ்டத்தின் கதவுகளையும் திறக்க போகின்றது.இந்த சூரிய பெயர்ச்சியினால் ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு மக நட்சத்தில் சூரியன் பெயர்ச்சியடைவது பல்வேறு வழிகளிலும் சாதக மாற்றங்களை கொடுக்கப்போகின்றது.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகுவோருக்கு இந்தக் காலகட்டம் வெற்றியளிக்க கூடியதாக இருக்கும். தொழில் மற்றும் நிதி நிலையில் அசுர வளர்ச்சி காணப்படும்.
புதிய தொழிலை எதிர்ப்பார்த்து காத்திருப்போருக்கு நல்ல செய்தி வீடு தேடி வரும். வியாபாரத்தில் ஈடுப்படுவோருக்கு இது லாபத்தை குவிக்கக்கூடிய பொற்காலமாக இருக்கும்.
கடகம்
கடக ராசியினருக்கு மக நட்சத்திரத்தில் சூரியனின் சஞ்சாரமானது அதிர்ஷடம் மிக்க பலன்களை கொடுக்கப்போகின்றது.
பரம்பரை சொத்துகள் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது. முதலீடுகள் காரணமாக அதிக லாபம் ஈட்டக்கூடிய காலகட்டமாக இது அமையும்.
குடும்பத்தில் இதுவரையில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். பொருளாதார ரீதியில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம்
மக நட்சத்திரத்தில் சூரியன் பெயர்ச்சியானது விருச்சிக ராசியினருக்கு அதிர்ஷ்டத்தின் கதவுகளை திறக்கப்போகின்றது. ஆன்மீக விடயங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதற்கு அல்லது வெளிநாட்டில் வேலை வாய்ப்பை பெறுவதற்கான வாய்ப்பு அமையும்.
செய்யும் தொழிலில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை எதிர்ப்பார்க்கலாம். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவு திருப்பியளிப்பதாக அமையும்.