நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கூறியுள்ள நிலையில், இவருக்கு பதில் வரும் பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் வருடம்தோறும் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி 7 சீசன் முடிவடைந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் 8வது சீசன் ஆரம்பமாக உள்ளது.
இந்நிகழ்ச்சி ஆரம்பித்த நாளிலிருந்து கடந்த வருடம் முடிந்த சீசன் 7 வரை தொகுத்து வழங்கியது நடிகர் கமல்ஹாசன் தான்.
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து வருகின்றார். நடிகர் என்பதையும் தாண்டி இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடன இயக்குனர் என பன்முக திறமையாளராக வலம் வருகின்றார்.
இந்நிலையில் இந்த ஆண்டும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் தான் பிக்பாஸிலிருந்து வெளியேறுவதாக கூறியுள்ளார்.
கமலுக்கு பதில் எந்த பிரபலம்?
கமல்ஹாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த தருணத்தில் அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
இதே போன்று நடிகர் சிம்பும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். ஆனால் சரத்குமாரும் தொகுப்பாளராக வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் ரசிகரக்ள், சரத்குமார், சிம்பு, ரம்யா கிருஷ்ணன் இவர்கள் யார் தொகுப்பாளர்களாக வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். மேலும் விஜய் சேதுபதியின் பெயரும் அடிபட்டு வருகின்றது.
மேலும் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் விரைவில் பிரபல ரிவி வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.