மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்.. அதிர்ஷ்டத்தை பெறும் 4 ராசிகள் இதோ

செவ்வாய் மிதுன ராசியில் சஞ்சரிக்கப் போவதால் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் ஜொலிக்க போகின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.

ஜோதிட சாஸ்திரங்கள் படி, கிரகங்கள் ஒவ்வொரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்பு ராசியினை மாற்றும் நிகழ்வு நடைபெறும். இந்நிகழ்வானது சில ராசியினருக்கு தாக்கத்தையும், சில ராசியினருக்கு அதிர்ஷ்டத்தையும் அளிக்கும்.

அந்த வகையில், தைரியம் மற்றும் ஆற்றலின் காரணியாக கருதப்படும் செவ்வாய், தனது எதிரியான புதனின் ராசியான மிதுன ராசிக்குள் ஆகஸ்ட் 26ம் தேதி பிற்பகல் 3:40 மணிக்குள் நுழைகிறது. செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தினால் வெற்றியை காணும் ராசியினரை தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

செவ்வாயின் இந்த சஞ்சாரத்தால் மேஷ ராசியினருக்கு மிகவும் சாதகமான பலன்கள் கிடைப்பதுடன், உடல்நிலை மற்றும் திருமண வாழ்க்கை நன்றாகவே இருக்கும். கடின உழைப்பானது உங்களை வெற்றியின் உச்சத்திற்கு கொண்டு செல்வதுடன், வெற்றியும் அளிக்கும்.

மிதுனம்:

மிதுன ராசியினருக்கு இந்த செவ்வாயின் சஞ்சாரத்தினால் நல்ல செய்தியை பெறுவதுடன், மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை காண்பதுடன், பணியிலும் வெற்றியடைவீர்கள்.

சிம்மம்:

செவ்வாயின் இந்த சஞ்சாரத்தினால் சிம்ம ராசயினருக்கு வருமான உயர்வு கிடைப்பதுடன், கனவுகள் அனைத்தும் நனவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், நிதி ஆதாயமும் கிடைக்கும். உங்கள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கும்.

கும்பம்:

செவ்வாயின் இந்த சஞ்சாரமானது கும்ப ராசியினருக்கு சாதகமான பலனை தருவதுடன், இவர்களின் வசதியும் அதிகரிக்குமாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதுடன், தொழிலும் லாபத்தை காண்பீர்கள். வேலை தேடுவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.

மறக்காமல் இதையும் படியுங்க   சனி சூரியன் இணைப்பு: சிம்மாசனத்திற்கு தயாராகும் மூன்று ராசிகள் உங்க ராசி?