21 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசியினர் டென்ஷனின் உச்சத்துக்கே செல்லபப்போகின்றார்கள்…உங்க ராசி என்ன?

ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலையில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும்.

உலக இன்பங்களின் அதிபதியான சுக்கிரன் தற்போது சிம்ம ராசியில் சஞ்சரித்துள்ளார். சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 25ஆம் திகதி இடப்பெயர்ச்சி அடைகின்றார்.

குறித்த இடம்பெயர்ச்சியானது தரித்திர என்ற யோகத்தை உருவாக்கப்போகின்றது. ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் இந்த யோகமானது அசுப விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

இதனால் குறிப்பிட்ட சில ராசியினருக்கு வாழ்வில் பிரச்சினைகளும் மனஉளைச்சலும் அதிகதிக்கப்போகின்றது. அப்படி பிரச்சினைகளில் சிக்கி தவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

கன்னி ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சியடைவதால் ஏற்படும் தரித்திர யோகமானது மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு பெரும் துர்திஷ்டத்தை ஏற்படுத்தப்போகின்றது.

தொழில் செய்யும் இடத்தில் தேவையற்ற வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புகள் காணப்படுகின்றது. நிதி ரீதியில் மந்தமான நிலை காணப்படும். இதனால் மனஅழுத்தம் மற்றும் விரக்தி அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசியினருக்கு இந்த தரித்திர யோகம் பல்வேறு வகையிலும் அசுப பலன்களையே கொடுக்கும். இந்த காலகட்டம் உங்கள் வாழ்வில் ஏறாளமான போராட்டங்களை சந்திக்ககூடிய காலகட்டமாக இருக்கப்போகின்றது.

பணவரவு இல்லாமல் மிகவும் கஷ்டமான சூழல் உருவாகும். எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் தோல்வியில் முடிவடைவதால் மிகுந்த மன அழுத்தம் ஏற்படும்.

மகரம்

மகர ராசியில் பிறந்தவர்களின் வாழ்வில் பெரும் திருப்பத்தை இந்த தரித்திர யோகம் ஏற்படுத்தப்போகின்றது. இந்த திருப்பம் மகிழ்சியளிப்பதாக அமையாது.

நிதி ரீதியில் பாரிய இழப்புகளையும் பெரிய ஏமாற்றத்தையும் சந்திக்க நேரிடும். இதனால் மிகுந்த மனஅழுத்தம் ஏற்படும்.இந்த காலகட்டத்தில் பணவிடயங்களில் மிகுந்த அவதானம் தேவை.

மறக்காமல் இதையும் படியுங்க   சனி சூரியன் இணைப்பு: சிம்மாசனத்திற்கு தயாராகும் மூன்று ராசிகள் உங்க ராசி?