பொதுவாகவே வீட்டில் கரப்பான் பூச்சி, வண்டு, தும்பி, பல்லி ஆகியவை உயிரினங்கள் இருப்பது வழக்கமாக விடயம் தான். ஆனால் இவ்வாறான உயிரினங்கள் இருப்பது நோயை ஏற்படுத்தும் என்பதனால் இதனை பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை.
அப்படி வீட்டில் உலாவும் உயிரினங்களில் பல்லி முக்கிய இடம் வகிக்கின்றது. பல்லியை வைத்து பல்வேறு சகுணம் பார்க்கும் வழக்கமும் தொன்று தொட்டு நிகழ்ந்து வருகின்றது.
பல்லியைப் பார்த்தாலே சிலருக்கு அருவருப்பும், பலருக்கும் பயமும் ஏற்படும். பல்லி இருந்தாலே வாழும் இடம் என்று சொல்வார்கள்.ஆனால், சுவற்றில் பல்லியைப் பார்த்தாலே தெறிக்க ஓடுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
இப்படி வாழும் வீட்டில் பல்லிகள் இருப்பது அதிர்ஷ்டமா அல்லது துரதிஷ்டமா எப்பது குறித்து இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.
பல்லி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
ஜோதிடம், வாஸ்து மற்றும் இந்து சாஸ்திரங்களில் பல்லி பற்றிய ஏறாளமான குறிப்புகள் காணப்படுகின்றது அதன் அடிப்படையில் வீட்டில் பல்லிகள் இருப்பது நிதி சார்ந்த விஷயங்களில் மிகவும் மங்களகரமானது என நம்பப்படுகின்றது.
பல்லி லட்சுமி தேவியுடன் நெருங்கிய தொடர்ப்பு கொண்டது என சாஸ்திரங்களில் குறிப்பிடப்படுகின்றது.வீட்டில் பல்லி இருப்பது லட்சுமி தேவியின் பூரண ஆசீர்வாதத்தை கொடுக்கும். இதனால் நேர்மறை ஆற்றல்கள் நிறைந்து வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
சிலர் புதிய வீட்டின் வாஸ்து பூஜையில் வெள்ளி பல்லி சிலைகளை பயன்படுத்தி பூஜை செய்யும் வழக்கத்தை பின்பற்றி வருகின்றனர்.இதுவும் லட்சுமி தேவியின் ஆசியை பெறுவதற்காகத்தான் பின்பற்றப்படுகின்றது.
மேலும் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் பூஜை அறை மற்றும் வரவேற்பு அறையில் பல்லிகள் இருந்தால் எதிர்க்காலத்தில் அதிக பணவரவு கிடைக்கப்போவதை முன்கூட்டியே தெரிவிப்பதாக பார்க்கப்படுகின்றது. இவ்வாறு பல்லிகள் தென்படுவது மிகவும் மங்களகரமானது.
தீபாவளி தினதில் பல்லியை பார்ப்பது மிகுந்த அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இதனால் ஆண்டு முழுவதும் லட்சுமி தேவி அருள் கிடைத்து பணத்தட்டுப்பாடு அறவே இருக்காது என்பது ஐதீகம்.
வீட்டில் ஒரே இடத்தில் 3 பல்லிகளை கண்டால் விரைவில் ஒரு நல்ல செய்தி வீடு தேடிவரும் என நம்பப்படுகின்றது.புதிய வீட்டை வாங்கியோ அல்லது கட்டியோ குடிபுகும் போது கண்ணுக்கு பல்லி தென்பட்டால், அது மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகின்றது.
கோயில்களில் உள்ள மரங்களில் பல்லியை பார்ப்பது தேவர்களை பார்ப்பதற்கு சமம். அது மிகப்பெரும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியது.