12 ஆண்டுகளுக்குப் பின்பு உருவாகும் குபேர யோகம்: பணமழையில் நனையும் 3 ராசியினர்

ஜோதிடத்தில் குரு பகவான் ரிஷப ராசியில் சஞ்சரிக்கும் நிலையில், குபேர யோகத்தினை அடையும் 3 ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.

ஜோதிடத்தில் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் மாற்றங்கள் மிகவும் முக்கியமாக கருதப்படுவதுடன், இதனால் பல மங்களகரமான நிகழ்வுகளும் மற்றும் ராஜயோகம் உருவாகும் என்று நம்பப்படுகின்றது.

சில கிரகங்களின் மாற்றம் 12 ராசிகளில் சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமான விளைவையும் கொடுக்கும்.

குரு பகவான், கடந்த 1.05.2024 முதல் 1.05.2025 வரை ரிஷப ராசியில் சஞ்சரிப்பார். இதனால் குபேர யோகம் உருவாகிறது.

குபேர யோகம்

ஜோதிடத்தில் குபேர யோகம் என்பது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகின்றது. ஜாதகத்தின் இரண்டாவது மற்றும் பதினொன்றாவது ராசியின் அதிபதி குரு பகவான். இவர் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் உயர் ஸ்தானத்தில் இருக்கும் போது பரஸ்பர ராசி மாற்றத்தினால் இந்த யோகம் உண்டாகின்றது.

இந்த யோகத்தின் மூலம், ஒரு நபர் சமூகத்தில் மிகுந்த மரியாதையைப் பெறுகிறார் என்று கூறப்படுகிறது. ஜாதகரின் வாழ்க்கையில் செல்வம், மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்காது என்று சொல்லப்படுகிறது.

குபேர ராஜ யோகத்தால் எந்த ராசிக்காரர்களுக்கு 1 வருடம் பேரதிர்ஷ்டம் என்பதை தற்போது தெரிந்து கொள்வோம்.

மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்த குபேர யோகம் மிகவும் சுப பலன்களை அளிக்கின்றது. புதிய வருமானம், நன்மை உண்டாவதுடன், பணத்தட்டுப்பாடும் நீங்கும்.

தொழிலிலும் முன்னேற்றம் அடைவதுடன், உடல்நலம் இல்லாதவர்கள் உடல்நலம் பெற்று மீள்வார்கள், வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், பொருாளதார நிலையும் வலுவாக இருக்கும்.

லக்ஷ்மி தேவியின் அருளால், செல்வம் மற்றும் தானியங்கள் மிதமிஞ்சி கிட்டும். உங்கள் வங்கிக் கணக்கில் சேமிப்பு அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசியினரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொடுப்பதுடன், வெளிநாட்டு பயணமும் கைக்கூடும்.

மாணவர்களுக்கு இது உகந்த நேரமாகவும், கல்விப் பணிகளில் அபரிமிதமான வெற்றியும் கிடைக்கும். குழந்தைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும்.

நீண்ட நாட்களாக செய்யாமல் போடப்பட்டிருந்த பணிகள் வெற்றி பெறும். தொழில், வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் அடைவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசியினரின் துரதிர்ஷ்டத்தினை இந்த குபேர யோகம் பிரகாசமாக்குமாம். இந்த நேரத்தில் உங்கள் நிதி நிலைமை வலுவாக இருக்கும்.

புதிய வருமான ஆதாரங்கள் மற்றும் வியாபாரத்தில் லாபம் ஏற்பட்டு செல்வம் பெருகும். மாணவர்கள் அபரிமிதமான வெற்றி பெறுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக நடக்கும்.

மறக்காமல் இதையும் படியுங்க  2025-ஐ புரட்டிப் போடப் போகும் சனி-குரு பெயர்ச்சி.. ராகுவோடு சேரும் கேது- இனி என்ன நடக்கும்?
Shares