செவ்வாயின் ராசி மாற்றம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தான்

2024 ஆம் ஆண்டில் ஜூன் மாத்தில் செவ்வாய் பகவான், தனது ராசியை மாற்றுவது ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

இன்றைய நாளில் (2024.06.01) கிரகங்களின் தளபதியான செவ்வாய் தனது ராசியை மாற்றுகின்றது. அதன் பிறகு, ஜூலை 12 மாலை 6:58 மணிக்கு, மீண்டும் ராசி மாற்றம் செய்வார்.

இந்த செவ்வாயின் ராசி மாற்றம், மூன்று ராசிக்காரர்களின் பொருளாதார நிலையில் மட்டுமல்ல, மனநிம்மதி, ஆரோக்கியம் சிந்தனையில் தெளிவையும் கொடுக்கும் அப்படிப்பட்ட அதிர்ஷ்டக்கார ராசிகாரர்கள் யார் என பார்ப்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். திருமணக்காரகராna செவ்வாய் கிரகத்தின் இந்தப் பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு திருமணத் தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் தொடங்கும். பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார நிலை முன்னேறும். வருமானம் அதிகரிப்பதால், செலவுகளை மனம்போல் செய்துவிட வேண்டாம். குடும்பத்தில் மன ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் பெற்றோரின் அறிவுரையைக் கேட்டு நடப்பது நல்லது.

மிதுனம்

செவ்வாயின் ராசி மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளைக் கொடுக்கும். வேலை செய்பவர்களுக்கு சாதகமன காலம் இது. பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் செல்லும். தைரியமாக இருப்பதன் வலிமையை உணரும் நேரம் இது. இந்த செவ்வாய்ப் பெயர்ச்சி காலகட்டத்தில் கிடைக்கும் அதிக வருமானம் உங்கள் மனதில் சொல்லவொண்ணா மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் சஞ்சாரம் நன்மை பயக்கும். முதலீடு செய்தவர்களின் முதலீடுகளுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைக்கும். உங்கள் ஆத்மார்த்தமான வேலைகளுக்கு தகுந்த பாராட்டு கிடைக்கும். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகல் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

மறக்காமல் இதையும் படியுங்க   இன்னும் 5 நாட்களில் வரவிருக்கும் சூரிய பெயர்ச்சி: அதிர்ஷ்டம் கொட்டப் போகும் ராசியினர் யார் தெரியுமா?
Shares