மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல் ; இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோலின் விலை

சிபெட்கோ எரிபொருள் விலை இன்று (2024.05.31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் மூன்று வகையான எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, இரண்டின் விலையில் மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 355 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோலின் விலை மாற்றமின்றி 420 ரூபாவாகும்.

ஒரு லீற்றர் டீசலின் விலை 16 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 317 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

சிலோன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையில் மாற்றமின்றி தொடர்ந்தும் அதன் விலை 377 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 202 ரூபாவாகும்.

Shares