இதுதான் அறிகுறிகள் இருந்தால் சனியின் அருள் உங்களுக்கு இருப்பதாக ஐதீகம்

9 கிரகங்களில் மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி தான். நீதி பகவான கருதக்கூடிய சனி பகவான் என்றாலே பலருக்கும் அச்சம் வரும். ஏனென்றால் சனியின் வக்ர பார்வை அனைவரின் வாழ்க்கையிலும் மாற்றத்தை கொண்டு வரும்.

அப்படி சனியின் அருள் உங்களுக்கு இருக்கிறதா என்பதை இந்த அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

கருப்பு நாயை பார்ப்பது

ஜோதிடத்தின் படி நீங்கள் வீட்டை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும் போது கருப்பு நாயை பார்த்தாலோ, அது பால் குடிப்பதை பார்த்தாலோ உங்களுக்கு சனி அருள் இருக்கிறது என்று அர்த்தம். இதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரும் என அர்த்தம்.

பிச்சைக்காரனை பார்ப்பது

ஜோதிடத்தின் படி பிச்சைக்காரர் சாப்பிடுவதை கண்டால் அது ஒரு சுப அறிகுறியாக கருதப்படுகிறது. அப்போது உங்களுக்கு சனியின் அருளும், ஆசீர்வாதமும் இருக்கிறது என்று அர்த்தம். இதன் மூலம் உங்கள் நிதி நிலை உயரப்போகிறது என்று அர்த்தம்.

கறுப்பு பசுவை பார்ப்பது

நீங்கள் எங்காவது கருப்பு பசுவை கண்டாலோ, அல்லது அது பால் கொடுத்து கொண்டிருப்பதை கண்டாலோ சனியின் அருள் கிடைப்பதாக அர்த்தம் என ஜோதிடம் சொல்கிறது. இது உங்கள் வாழ்க்கையில் வரவிருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும் உணர்த்துகிறது.

மறக்காமல் இதையும் படியுங்க   இன்னும் 5 நாட்களில் வரவிருக்கும் சூரிய பெயர்ச்சி: அதிர்ஷ்டம் கொட்டப் போகும் ராசியினர் யார் தெரியுமா?
Shares