சுக்கிரன் மே 23 ஆம் தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடம் மாறுகிறார்.
மீனத்தில் இருந்து வெளிவந்து மேஷ ராசியில் நுழையும் சுக்கிரன், 2022 ஜூன் 18 ஆம் தேதி வரை இருந்து பின், சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் நுழைவார்.
இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது… கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு?
இந்த சுக்கிர பெயர்ச்சியால், சில ராசிக்காரர்களின் கையில் அதிக பணம் சேரப் போகிறது.இப்போது சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களின் செல்வம் பெருகப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்வதால், இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் நற்பலன்களை அள்ளி வழங்க போகிறார்.
மிதுனம்
மே 23 முதல் ஜூன் 18 வரை, இநத ராசிக்காரர்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். இக்காலத்தில் புதிய வருமான ஆதாரங்களால் நிதி நிலைமையானது முன்பை விட சிறப்பாக இருக்கும். உங்கள் குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள்.
சிம்மம்
சுக்கிர பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இக்காலம் மிகவும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். வேலையில் உங்கள் புகழ் அதிகரிக்கும். வேலையில்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். சொத்து அல்லது முதலீடுகளால் லாபம் கிடைக்கும்.
இனி 25 நாளைக்கு இந்த 5 ராசிக்காரங்க காட்டுல பண மழை பொழிய போகுது… கோடீஸ்வர யோகம் யார் யாருக்கு?
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியானது, வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டு வரும். புதிய வாகனம் வாங்க நினைத்துக் கொண்டிருந்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். காதல் திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு, அது நடக்க வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! மேஷம் செல்லும் சுக்கிரனால் பணியிடத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. ஃபேஷன், கவர்ச்சி அல்லது மீடியாவில் தொடர்புடையவர்களுக்கு இது சாதகமான காலம். இக்காலத்தில் நீங்கள் உங்கள் நடத்தை மற்றும் பேச்சின் மூலம் உங்கள் மீது நல்ல அபிப்ராயத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்துவீர்கள்.