ரிஷப ராசியில் சுக்கிரன்: ராஜயோகம் இந்த ராசியினருக்கு தான்… உங்க ராசி என்ன?

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலையில் ஏற்படும் மாற்றங்கள் 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் சொந்த ராசியான ரிஷபத்தில் நுழைந்துள்ள சுக்கிரனால் குறிப்பிட்ட சில ராசியினரின் வாழ்வில் பல்வேறு சாதக மாற்றங்கள் நிகழப்போகின்றது.

அப்படி சுக்கிரனால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியில் பிறந்தவர்களின் நிதிநிலை சுக்கிரன் பெயர்ச்சியால் உயரப்போகின்றது. காதல் வாழ்க்கையில் இதுவரையில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரன் ரிஷபத்தில் இருப்பதால், இந்த ராசியினரின் வாழ்வில் மிகப்பெரும் அதிர்ஷ்டம் கிடைக்கப்போகின்றது. ஏற்கனவே ரிஷபத்தில் குரு இருப்பதால் தொழில், வேலை என அனைத்திலும் வெற்றி உண்டாகும்.

கடகம்

கடக ராசியில் சுக்கிரன் ஆதாய ஸ்தானத்தில் இருப்பதால், குருவின் சந்திப்பாலும் இந்த காலகட்டத்தில் செல்வ செழிப்பு உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். திருமண வாழ்க்கையில் இதுவரையில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி தெளிவு பிறக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களின் 10ஆம் இடத்தில் சுக்கிரம் இருப்பதால் தொழில் ரீதியில் முன்னேற்றம் ஏற்படுவதுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தேடிவரும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

மறக்காமல் இதையும் படியுங்க   இம்மாதம் முதல் 2025 வரை சனியால் வாழ்க்கை தலைகீழாக மாறப்போகும் ராசிகள் எவை?
Shares