பொதுவாக ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவர்களின் குணங்களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுனகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியை சேர்ந்த ஆண்கள் மனைவியின் சொல்லை தட்டாமல், சில சமயம் மனைவிக்கு அடிமையாக கூட நடந்துக்கொள்ள தயாராக இருப்பார்கள்.
அப்படி மனைவியிடம் அடங்கி இருக்கும் ஆண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்
மீன ராசியில் பிறந்த ஆண்கள் பிறப்பிலேயே இதிக சகிப்புத்தன்மை கொண்டவர்கள். இவர்களுக்கு வாக்குவாதம் செய்வது பிடிக்காத விடயமாக இருக்கும்.
அதனால் தன் மனைவியின் பேச்சுக்கு பெரும்பாலும் தலை அசைக்கும் நபராகவே இந்த ராசியினர் இருப்பர்.
இவர்களை திருமணம் செய்யும் பெண்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே சொல்ல வேண்டும்.
சிம்மம்
சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த சிம்ம ராசியினர் எப்போதும் யாருக்கும் அடங்கி போவது கிடையாது. தங்களின் இடத்தில் அவர்கள் தான் அதிபதியாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள்.
ஆனால் திருமண வாழ்க்கையில் தன்னுடைய மனைவிக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் மனைவியின் வார்த்தைக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள். அவர்களை திருமணம் செய்யும் பெண்கள் அதிஷ்டசாலிகள்.
மகரம்
சனியின் அதிக்கத்தில் பிறந்த மகர ராசியினர் எப்போதும் சுதந்திரமாக இயங்கக்கூடியவர்கள். ஆனால் திருமணமான பிறகு எல்லா விடயங்களையும் மனைவியுடன் பகிர்ந்துக்கொள்வார்கள்.
மனைவியின் சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்களாக தங்களை மாற்றிக்கொள்வார்கள். வாழ்நாள் முழுதும் இவர்கள் மனைவியை ராணி போல் பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள்.
கும்பம்
கும்ப ராசியினர் இயல்பாகவே திரமணத்தின் மீது அதிக நம்பிக்கை மற்றும் மரியாதை கொண்டவர்களாக இருப்பார்கள்.
எனவே திருமணத்திற்குப் பிறகு அவர்கள் மனைவிக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். எல்லா விடயத்தையும் மனைவியுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இயல்பாகவே இருக்கும்.