சென்னையில் திருமுல்லைவாயிலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேற்கூரையில் தவறி விழுந்த கைக்குழந்தையை மீட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது குழந்தையின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள குடியிருப்பு ஒன்றின் மேற்கூரையில் ஒரு கைக்குழந்தை தவறி விழுந்துள்ளது.
இந்த மேற்கூரையில் இருந்து குழந்தை கீழே விழ இருந்த நிலையில், அந்த குடியிருப்பு வாசிகள் பல முயற்சிகளை மேற்கொண்டு குழந்தையை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து மேற்கூரையில் விழுந்து கிடந்த குழந்தையை மீட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பொலிஸார் தீவிர விசாரணை
சமூக வலைதளங்களில் வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதால், இது தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
வீட்டின் மேல் மாடியில் இருந்து துடைப்பத்தை தாய் கையில் எடுத்தபோது கையில் இருந்து தவறி குழந்தை விழுந்து விட்டதாக தகவல் வெளியானது. இந்தநிலையில் குழந்தையின் தாயை நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர். குழந்தையை சரியான முறையில் கவனிக்கவில்லையென விமர்சிக்கப்பட்டது.
இந்தநிலையில் குழந்தையின் தாய் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவத்திற்கு பிறகு அங்கிருந்து சொந்த ஊரான காரமடைக்கு வந்துள்ளார்கள். நேற்று வீட்டில் அனைவரும் வெளியில் சென்றுள்ளனர்.
இதனையடுத்து மீண்டும் வீட்டிற்கு திரும்பிய போது குழந்தையின் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து உடலை கைப்பற்றியவர்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தற்கொலை செய்து கொண்ட பெண், சிறிது நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து காரமடை பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.