இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வருகிறார்களா? அப்போ உங்களுக்கு ஜாக்பாட் தான்

மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும்.அப்படி தூங்கும் போது வரும் கனவுகளில் நல்லதும் இருக்கலாம் கெட்டதும் இருக்கலாம்.

நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கிறது. கனவுகளில் நமக்கு நன்மை நடப்பது போல தான் வரும் என்று சொல்ல முடியாது. கெட்டது நடப்பது போலும் வரலாம் ஆனால் கனவில் நடப்பது போல் நேரில் நடக்காது அதற்கான பலன்கள் தான் நடக்கும்.

சில நேரங்களில் இந்த கனவுகள் நனவாகும். சில நேரங்களில் அவை நிறைவேறாது. ஆனால் அந்த கனவுகள் நிச்சயமாக எங்காவது நம் வாழ்க்கையுடன் தொடர்புபட்டிருக்கும் என்கின்றது கனவு பற்றிய அறிவியல்.

அந்தவகையில் இறந்தவர்களை கனவில் கண்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இறந்தவர்கள் கனவில் கண்டால் என்ன பலன்?

கனவு அறிவியலின் அடிப்படையில் இறந்தவர்களை கனவில் காண்பது மங்களகரமானதாகவே கருதப்படுகின்றது. இதனால் நல்ல செய்தி தேடிவரும் என நம்பப்படுகின்றது.

இறந்தவர்கள் அடிக்கடி கனவில் வந்தால், நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்றும் அவர்களின் ஆசீர்வாதம் உங்களுடன் எப்போதும் இருப்பதாகவும் அர்த்தம்.

இறந்தவர்களுடன் பேசுவதை போன்ற கனவு வந்தால் சமூகத்தில் பெயரும், புகழும் அதிகரிக்கும் வாய்ப்பு அமையும்.

இறந்தவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதை போன்ற கனவு வந்தால் நீங்கள் பெரிய கண்டத்தில் இருந்து பாதுகாக்கப்பட போகின்றீர்கள் என்று பொருள்.

உங்களின் கனவில் சவப்பொட்டியை கண்டால் நெருங்கிய உறவினர் யாரோ இறக்கப்போவதாக அர்த்தம்.

இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் உங்களுக்கு வரவிருக்கும் பெரிய பிரச்சினையொன்றை சமாளிக்கப்போகின்றீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் இறந்துவிட்டதுபோல் கனவு வந்தால், நன்மைகளே ஏற்படும். வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட போகிறது என்பதை தெரிவிப்பதாகவே பார்க்கப்படுகின்றது.

Shares