பொதுவாகவே அனைவரும் வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன அமைதியுடனும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் சிலருக்கு என்ன தான் முயற்சி செய்தாலும் வாழ்வில் கஷ்டங்களும் பிரச்சினைகளும் தொடர்ந்துக்கொண்டே இருக்கும்.
இவ்வாறு தொடர்ந்து வாழ்வில் துன்பங்கள் ஏற்பட பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் வீட்டில் இறந்தவர்களின் சில பொருட்களை வைத்திருப்பது முக்கிய காரணமாக குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு நாம் இறந்தவர்களின் பொருட்களில் எதை வீட்டில் வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
வீட்டில் வைக்க கூடாதவை
சாஸ்திரங்களின் அடிப்படையில் இறந்தவர்களின் சில பொருட்களை எரித்தோ அல்லது தண்ணீரில் மிதக்க விட்டோ வீட்டில் இருந்து அகற்றுவதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து விடுபடுபடலாம் என குறிப்பிடப்படுகின்றது. ஜோதிட சாஸ்தில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு அமைய இறந்தவர்களின் பொருட்களை ஒருபோதும் அணியவே கூடாது. குறிப்பாக இறந்தவர்களின் ஆடைகளை வீட்டில் வைத்திருப்பதோ அல்லது பயன்படுத்துவதோ பல்வேறு துன்பங்களுக்கு வழிவகுக்கும்.
பெரும்பாலும் இறந்தவர்களின் காலணிகள், கைக்கடிகாரங்கள் என எந்த பொருளையும் பயன்படுத்த கூடாது என சாஸ்திரங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தங்க நகையாக இருந்தாலும் கூட அதனை அழித்து விட்டு வேறு நகை செய்து பயன்படுத்த வேண்டுமே தவிர இறந்தவர்களின் நகையை ஒருபோதும் அப்படியே அணிந்துக்கொள்ள கூடாது.
இறந்தவர்கள் பயன்படுத்திய படுக்கை, பாயை வீட்டில் வைத்திருப்பது செய்யும் பணிகளில் தடையை ஏற்படுத்துவதுடன் தொடர்ச்சியாக பிரச்சினைகளையும் மன குழப்பங்களையும் கொடுத்துக்கொண்டே இருக்கும். இறந்தவர்களின் பொருட்களை வீட்டில் வைத்திருப்பது வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரிக்கச்செய்யும் அதனால் மன அமைதியின்மை மற்றும் வாழ்வில் தீராத பிரச்சினைகள் நீடித்துக்கொண்டே இருக்கும்.
எனவே இறந்தவர்களின் பொருட்களை வீட்டில் இருந்து எரித்தோ, நீரில் மிதக்கவிட்டோ அப்புறப்படுத்துவது நன்மை பயக்கும்.