உடலில் வரக்கூடிய பல பிரச்சனைகளை குணமாக்கக்கூடிய அசோக மரத்தின் பட்டை எதுக்கெல்லாம் உதவி செய்கின்றது என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
அசோக மரத்தின் பட்டைகள்
நமக்கு மூலிகையாக இயற்கையில் பல பொருட்கள் இருக்கிறது. அதே போல தான் அசோக மரப்பட்டைகளை நம் உடலில் இருக்கும் வியாதிகளுக்கு பயன்படுத்த முடியும்.
பட்டைகள் தானே என்று நாம் சாதாரணமாக விடக்கூடிய மூலிகைகையாக இந்த அசோக மரத்தின் பட்டைகளும் விளங்கும். அசோக மரத்தின் பட்டை மட்டுமல்ல இலைகள் பூக்கள் என அனைதிலும் இது பயன் தரக்கூடியது.
இதன் இலைகள், வயிற்றிலுள்ள புழு, பூச்சிகளை நீக்கி குடலை சுத்தம் செய்கின்றன.
இதன் பட்டைகளை சிறிது நீரில் இரவு முழுவதும் ஊறவைத்துவிட்டு, காலையில் பட்டையை விழுதுபோல் அரைத்து, சருமத்திற்கு பூசிவந்தால், சருமம் ஜொலி ஜொலிக்கும்.
தோலில் உள்ள அலர்ஜிகள் நீங்கி, பொலிவுபெறும். இதை தவிர சிறுநீர் பைகளில் உண்டாக்கக்கூடிய கற்களுக்கு இந்த பட்டை சிறந்த நிவாரணமாக விளங்குகிறது.
இந்த மரத்தின் பட்டையில் கெட்டோஸ்டெரால் என்ற பொருள் உள்ளதால், ஒழுங்கற்ற மாதவிடாய்களை சரிசெய்கிறது. எனவே அசோக மரத்தின் பட்டைகளை நாம் மூலிகை மருந்தாக எடுத்துக்கொள்ளுதல் மிகவும் நன்மை தரும்.