உங்களுக்கு கை, கால் மரத்து போகும் பிரச்சினை இருக்கா? இந்த உணவுகள் தீர்வு கொடுக்கும்

பொதுவாகவே உடலின் அனைத்து பாகங்களும் சரியாக இயங்க வேண்டும் என்றால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டியது அவசியம்.

நமது உடலில் ரத்த ஓட்டம் தடைப்படும் பொழுது வலி, தசை பிடிப்பு, மரத்து போதல், செரிமான கோளாறுகள், கைகள் அல்லது கால்கள் குளிர்ந்து போதல் ஆகிய பிரச்சினைகள் ஏற்படுகின்றது.

இதற்கான முக்கிய காரணம் உறுப்புகளுக்கு இயல்பாக செல்ல வேண்டிய ஆக்சிஜன் சரியாக கிடைக்காதது தான்.இது போன்ற நேரங்களில் அடிக்கடி கை, கால் மரத்து போகும் நிலை ஏற்படலாம்.

இது போன்ற வியாதிகளை சில மருந்துவில்லைகள் நொடிப்பொழுதில் குணமாக்கி விடுகின்றன. ஆனால் எல்லா விடயங்களுக்கும் மருந்து பொருட்களை பயன்படுத்துவது பல்வேறு பக்க விளைவுகளையும் பரிசாக கொடுத்துவிடும்.

எப்படிப்பட்ட நோயாக இருந்தாலும் அதற்கு சரியான தீர்வாகவும் மருந்தாகவும் உணவே பார்க்கப்படுகின்றது.

அந்த வகையில் அடிக்கடி கை, கால் மரத்து போகும் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வெங்காயம் மற்றும் பூண்டு

உடலின் ரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் பூண்டு முக்கிய இடம் பிடிக்கின்றது. அத்துடன் வெங்காயத்தில் காணப்படும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் போன்ற வேதிப்பொருட்கள் இரத்த ஓட்டத்தை சீர்படுத்துக்கின்றன.
உப்பு நீரில் வாழும் மீன்கள்

ரத்த நாளங்கள் சீராக இயங்குவதற்கு ஒமேகா-3 அமிலங்கள் இன்றியமையாதது. வஞ்சரம், கானாங்கெளுத்தி, சூரை, நன்னீர் மீன் போன்ற மீன்களில் அதிக அளவு ஒமேகா-3 அமிலங்கள் செறிந்து காணப்படுகின்றது.
சிட்ரஸ் பழங்கள்

உடலுக்கு தேவையான தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்குவதில் சிட்ரஸ் பழங்கள் சிறந்தது. ஆகவே ஆரஞ்சு, திராட்சை மற்றும் எலுமிச்சை போன்ற பழங்களை அடிக்கடி உனவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
நட்ஸ் வகைகள்

நட்ஸ் வகைகளில் மெக்னீசியம், பொட்டாசியம் ஆர்கினின் மற்றும் கால்சியம் ஆகியவை நிறைந்துள்ளன. இவை ரத்த ஓட்டத்தை சீராக்க பெரிதும் துணைப்புரிகின்றது.

இதனால் வால்நட், ஹேசில்நட் முந்திரி பருப்பு மற்றும் பாதாம் போன்ற நட்ஸ் வகைகளை அடிக்கடி எடுத்து கொள்வது கை, கால் மரத்து போகும் பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக அமையும்.

Shares