காகத்திற்கு சோறு வைக்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன தெரியுமா?

இந்து மதத்தில் சனிபகவானுக்கு வாகனமாக கருதப்படும் காகத்திற்கு சோறு வைக்கும் போது எந்தெந்த விஷயங்களை கவனித்து வைக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

சோறு வைத்தல்

காகம் ஒரு பறவையாகும். இதற்கு இந்து மதப்படி பல வரலாறு கதைகள் உண்டு. அந்த வகையில் எமது முன்னோர்கள் எமக்கு கற்றுத்தந்த விஷயங்களில் காக்கைக்கு சோறு வைக்கும் பழக்கத்திற்கும் அடிமையாக்கி சென்றுள்ளனர்.

அந்த வகையில் நம்மடைய முன்னோர்கள் நம்மை அதாவது இறந்தவர்கள் நம்மை காண காகத்தின் வடிவில் வருவார்கள் என்பது நம்பிக்கையாகும்.

அதனால் அவர்களை உபசரிக்கும் முகமாக அவர்களுக்கு விருந்தளிக்கும் எண்ணத்துடன் உணவு வைத்தல் வேண்டும். இதன்போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.

நாம் குளிக்காமல் காக்கைக்கு சோறு வைக்க கூடாது இப்படி செய்தால் நாம் உணவளிப்பதில் எந்தவித பயனும் இல்லை. அவர்களின் ஆசி கிடைக்காது.

இந்த நல்ல காரியங்களை அமாவாசை மகாளயம் போன்ற நாட்களில் விஷேமாக செய்ய வேண்டும். காகம் தான் மட்டும் உணவை உண்ணாமல் மற்ற பறவைகளையும் சேர்த்து வந்து உண்ணும்.

இதனால் நமக்கு சனி பகவானின் ஆசி எளிதில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நாம் காகத்திற்கு உணவளிக்கும் போது நாம் சாப்பிட்ட மிச்ச மீதியை கொடுக்க கூடாது.

அப்படி கொடுத்தால் அது நாம் முன்னோர்களிடம் சாபத்தை வாங்க நேரிடும். முன்னோர்களின் ஆசி கிடைக்க வேண்டும் என்றால் நாம் காகத்திற்கு இதுபோன்ற விஷயங்களை அறிந்து உணவு கொடுக்க வேண்டும். இதனால் செல்வ செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழலாம்.

மறக்காமல் இதையும் படியுங்க  2025-ஐ புரட்டிப் போடப் போகும் சனி-குரு பெயர்ச்சி.. ராகுவோடு சேரும் கேது- இனி என்ன நடக்கும்?
Shares