சனி வக்ர பெயர்ச்சி… ராஜயோகத்தால் கிடைக்கும் பேரதிர்ஷ்டம்! அந்த 5 ராசியினர் யார்?

சனி வக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை பெற்று மகிழ்ச்சியில் மூழ்கும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சனி பகவான்

ஜோதிடத்தின் படி கடந்த 2023ம் ஆண்டு சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகும் நிலையில், இந்த ராசியில் 2025 வரை குறித்த ராசியிலேயே இருப்பார்.

எனினும் வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி, உதயம், அஸ்தமனம் போன்ற மாற்றங்கள் நிலவும் என்பதால், தற்போது ஜுன் 30ம் தேதி வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார்.

ஜோதிடத்தில் இந்நிகழ்வு மிகப்பெரிய நிகழ்வாக பார்க்கப்படுவதுடன், சில ராசிகளுக்கு அதிகப்படியான அற்புதங்களும் நிகழ்கின்றது.

மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்த வக்ர பெயர்ச்சியால் பணியிடத்தில் வெற்றி கிடைப்பதுடன், கல்வி துறையிலும் சிறந்த நேரமாக இருக்கும். பொருளாதாரத்தில் வலுவான நிலையும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இருக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தினை செலவிடும் நீங்கள், மரியாதை அந்தஸ்துடன் இருப்பீர்கள்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இந்த வக்ர பெயர்ச்சியால் நிதி நிலை வலுவாகும். முதலீடு நன்மை அளிப்பதுடன், நிதி ஆதாயமும், தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றமும் இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சியால் நிதி ஆதாயம் இருப்பதுடன், நிதி நிலையும் மேம்படும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிப்பதுடன், அலுவலகத்தில் பதவி உயர்வும் கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசியினரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிப்பதுடன், அரசு வேலை தேடுபவர்களுக்கு நல் செய்தி கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இருப்பதுடன், அனைவரது பாராட்டையும் பெறுவார்கள்.

தனுசு

தனுசு ராசி மாணவர்களுக்கு மிக நல்ல நேரமாக இந்நேரம் இருக்கும். போட்டி தேர்வில் வெற்றி கிடைப்பதுடன், ஆன்மீக பணியிலும் நாட்டம் அதிகரிக்கும். கடினமாக உழைத்தால் நிச்சயம் வெற்றி பெறுவீர்கள்.

மறக்காமல் இதையும் படியுங்க  2025 ராசி பலன்: ஆரோக்கியத்தில் பாதிப்பை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை
Shares