சனி பகவான் நம்மை எப்படி வாட்டினாலும் அவர் நம்மை விட்டு விலகும் போது நமக்கு அளவிற்கு மிஞ்சிய செல்வத்தை அள்ளித் தந்து செல்வார்.
அதனால் தான் சொல்வார்கள் ‘சனியை போல் கொடுப்பாரும் இல்லை சனியை போல் கெடுப்பாரும் இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது.
அந்த வகையில் இதுவரை சனியால் பாதிப்பை மட்டுமே சந்தித்து வந்த ராசிகள் இந்த ஆண்டு சனியின் பாதிப்பில் இருந்து விலகி உச்சகட்ட சந்தோஷங்களை பெறப்போகின்றனர். இதை விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
உங்கள் ராசியில் இப்போது இருக்கும் சனி லாப சனியாகும். எனவே இந்த ராசிக்காரர்கள் அவர்களது பொருளாதார மற்றும் தொழில் விஷயத்தில் இப்போதில் இருந்து உச்சகட்டத்தை நோக்கி செல்வார்கள்.
இதுவரை குழந்தை இல்லையென்று கஷ்டப்பட்டவர்கள் இனிமேல் அந்த கஷ்டத்தில் இருந்து விடுபடுவார்கள். உங்களின் செல்வாக்கு பல மடங்கு உயரும்.
உங்களிடம் செல்வம் இருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் தான தர்மம் செய்தால் உங்களின் செல்வம் எப்போதும் குறையாமல் அப்படியே இருக்கும்.
கன்னி
இதுவரை காலமும் பல நோய் மற்றும் பல அவஸ்தைகளால் பாடுபட்டிருப்பீர்கள். அப்படி இருந்த காலம் விலகி இனிமேல் வரும் காலங்களில் உங்களை ஆட்டிப்படைத்த அனைத்து கெட்ட சக்தியும் உங்களை விட்டு விலகும்.
சனிபகவான் உங்களுக்கு விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். இதுவரை உங்களை வருத்திய நோய்கள் உங்களை விட்டு விலகும்.
தனுசு
சனிபகவான் ஏழரை ஆண்டு காலமாக உங்களை ஆட்டிப்படைத்திருப்பார். இனிவரும் காலங்களை நீங்கள் மிகவும் இனிமையாக கொண்டாடலாம்.
தனுசு ராசிக்காரர்களின் துன்பங்கள், துயரங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. நீங்கள் முன்னேற்றத்திற்காக முயற்ச்சி செய்யும் அனைத்து விஷயமும் சனியின் உதவியால் வெற்றியில் முடியும்.
நீங்கள் சனிபகவானுக்கு எள் எரித்து வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் விரைவில் முடியும்.