Goat படத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் மறைந்த கேப்டன் விஜயகாந்த்.. காட்சியை பார்த்து அசந்துபோன பிரேமலதா..!

பிரம்மாண்ட பட்ஜெட்டில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் Goat. இப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். வெங்கட் பிரபு இயக்கி வரும் இப்படத்தில் டீ-ஏஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர்.

அதுமட்டுமின்றி AI தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி கேப்டன் விஜயகாந்தை Goat திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளனர். விஜயகாந்தின் மறைவுக்கு பின் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக Goat திரைப்படத்தில் இப்படியொரு விஷயத்தை செய்துள்ளனர்.

விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவிடம் இதற்கான முறையான அனுமதியை பெற்று தான் Goat படத்தில் விஜயகாந்த் AI தொழில்நுட்பம் மூலம் நடிக்க வைத்துள்ளனர். விஜயகாந்த் வரும் காட்சி ப்ரீ கிளைமாக்ஸ் காட்சி என தகவல் வெளியாகியுள்ளது. அதுவும் 2.30 நிமிடங்கள் அந்த காட்சியில் AI மூலம் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளார்களாம்.

இந்த காட்சியை மொத்தமாக எடுத்து முடித்துவிட்ட இயக்குனர் வெங்கட் பிரபு, பிரேமலதாவிடம் AI மூலம் விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளதை காட்டியுள்ளார். இதை பார்த்து பிரேமலதா அசந்துபோய்விட்டார் என பிரபல மூத்த பத்திரிகையாளரான அந்தணன் கூறியுள்ளார்.

கண்டிப்பாக Goat படத்தில் இடம்பெறும் விஜயகாந்தின் காட்சி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட் ஆக இருக்க போகிறது.

மறக்காமல் இதையும் படியுங்க  நடிகர் சிவ ராஜ்குமாருக்கு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை! எனன் ஆனது?
Shares