எருக்கன் செடியில் இதை போல் காயை கண்டால் தவறவிடாதீர்கள்

தெய்வீக மூலிகை எனப் போற்றப்படும் எருக்கு வளமற்ற நிலங்கள் பராமரிக்கப்படாத வயல்கள் சாலையோரங்கள் சுடுகாடு என எங்கும் விளையும் பன்னிரண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும் கூட உயிர்வாழும் ஆற்றல் கொண்டது.

எருக்கின் இலை, பூ, பட்டை, வேர் என அனைத்திலும் மருத்துவக் குணங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கத்தரிப் பூ நிறப் பூக்களைக் கொண்ட எருக்குதான் பெரும்பாலான இடங்களில் இருக்கும். ஆனால், வெள்ளை நிறப் பூக்களை உடைய எருக்கு அரிதாக காணப்படும்.

எருக்கன் பூவை காயவைத்துப் பொடியாக்கிக் கொள்ளவேண்டும். இந்தப் பொடியில் 200 கிராம் எடுத்து, சிறிது சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், பால்வினை நோய், தொழு நோய் குணமாகும்.

எருக்கன் செடியில் இரண்டு வகை உள்ளது. ஒன்று நாம் சாலையோரங்களில் காண்கின்ற சாதாரண எருக்கஞ்செடி. மற்றொன்று தெய்வீக மரமாக கருதப்படும் வெள்ளை எருக்கன் செடி.

வெள்ளெருக்கன் செடி பல அற்புதமான ஆற்றல்கள் கொண்ட தெய்வீக மூலிகையாகும். இந்த வெள்ளெருக்கு செடியை பற்றி சித்தர்கள் கண்டுபிடித்த சித்த வைத்தியத்தில் மனிதர்களின் பல நோய்களை தீர்க்கம் ஒரு அற்புதமான விருட்சமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

வறண்ட பிரதேசத்திலும் வளரும். ஒரு ஆள் உயரத்திற்குக் கூட உயர்ந்து அடர்த்தியாக படர்ந்து வளரும். நிறைய கிளைகள் விட்டு நுனியில் கொத்துக் கொத்தாக மொட்டு விட்டு மலர்ந்து காய்க்கும்.

அடியிலை பழுத்து மஞ்சள் நிறமாக மாறி கீழே விழுந்து விடும். எருக்கன் செடியின் நுனி முதல் அடிவேர் வரை பால் போன்று நீரோட்டமிருக்கும்.

Shares