இந்த 3 ராசிகளுக்கு சனியால் உருவாகும் ராஜயோகம்

நவகிரகங்களில் மெதுவாக நகரக்கூடியவர் சனி தான். நீதிபதியாக விளங்கக்கூடிய சனிபகவான் ஒரு ராசிக்குள் நுழைந்தால் அதே ராசிக்கு மீண்டும் திரும்ப 30 ஆண்டுகள் எடுத்துக்கொள்கிறார். 2023ஆம் ஆண்டு கும்பத்தில் நுழைந்த சனி, அடுத்த ஆண்டு வரை அங்கேயே தான் வசிப்பார்.

சனியின் பிறந்த இடம் கும்பம் என்பதால், இதன் மூலம் தற்போது ‘ஷஷ’என்ற ராஜயோகம் உருவாகியுள்ளது. இது அனைத்து ராசிகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட இந்த 3 ராசிக்கு மிகப்பெரிய நற்பலன்களை தரப்போகிறது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு நான்காம் வீட்டில் இந்த ராஜயோகம் நடக்கிறது. இதனால் நீங்கள் சிறப்பான பலன்களை பெறப்போகிறீர்கள். உங்கள் நிதி நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். மே மாதம் முதலிருந்தே நீங்கள் அபரிமிதமான செல்வத்தை பெற்று வருவீர்கள். தொழிலில் முன்னேற்றத்தை அடைவீர்கள். சம்பள உயர்வு இருக்கும்.

துலாம்

ஷஷ ராஜயோகத்தால் துலாம் ராசிக்காரர்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் அனைத்தும் முடிவடையும். வெளிநாட்டில் கல்வி கற்க விரும்புவர்களுக்கு நேரம் சாதகமாக அமையும். சொத்து வீடு வாங்க நினைப்பவர்களுக்கு ஆசை நிறைவேறும். உங்கள் ஆரோக்கியம் படிப்படியாக மேம்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் மிகப்பெரிய நன்மையை தரப்போகிறது என்று சொல்லலாம். விதியின் முழு ஆதரவோடு வாழ்க்கையில் ஆசைப்பட்ட அனைத்தும் கைக்கூடும். எல்லா துறைகளிலும் வெற்றி பெறுவது நிச்சயம். பணியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். மூத்த அதிகாரிகள், சக ஊழியர்களின் பாராட்டுக்களை பெறுவீர்கள். நீதிமன்ற விவகாரங்களில் வெற்றி கிடைக்கும்.

மறக்காமல் இதையும் படியுங்க   கேந்திர திரிகோண ராஜயோகம்: செப்டம்பர் மாதம் முதல் அதிர்ஷ்டம் பெருகப் போகும் ராசிகள்
Shares