ஜூன் 1 முதல் யோக பலன்களை அனுபவிக்க போகும் ராசிகள் யார் யார்?

கிரகங்களின் தளபதியான செவ்வாய், மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழ்கிறார். இக்கிரகத்தின் பெயர்ச்சியும் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

செவ்வாய் கிரகம் சுப ஸ்தானத்தில் இருந்தால் அந்த நபர் வீரமாகவும், தைரியத்துடனும் செயல்படுவார். இதன் பெயர்ச்சியானது ஜூன் 1, 2024 அன்று நிகழவுள்ளது, மேஷத்தில் பெயர்ச்சி ஆகிறார்.

இதனால் உருவாகும் ருச்சக் ராஜயோகத்தால் யாருக்கு என்ன பலன்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேஷம்

செவ்வாய் பெயர்ச்சியால் தொழிலில் முன்னேற்றம் உண்டு, முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம்

உங்களது விருப்பங்கள் நிறைவேறும் காலகட்டம் இதுவாகும், வருமானம் பெருகும், புதிய வேலைகளை தேடுவீர்கள், தொழிலில் எதிர்பார்த்த திட்டங்கள் நிறைவேறும், இதனால் லாபம்
பெருகும்.

சிம்மம்

செவ்வாய் பெயர்ச்சியால் சாதகமான முடிவுகள் கிடைக்கும், பணியிடத்தில் பாராட்டுகளை பெறுவீர்கள், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு, எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கப்பெறும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், தொழிலில் புதிய திட்டங்களை நிறைவேற்றுவீர்கள், வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும், பணத்தை சேமிப்பதற்கான வழிகளை தெரிந்து கொள்வீர்கள்.

மறக்காமல் இதையும் படியுங்க  2025 ராசி பலன்: ஆரோக்கியத்தில் பாதிப்பை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை
Shares