உணவுப் பொருட்களுக்கு விசேட சலுகை வழங்க சதொச நிறுவனம் தீர்மானம்

வெசாக் மற்றும் பொசன் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தன்சல்களுக்கு தேவையான உணவுப் பொருட்களுக்கு விசேட விலைச் சலுகைகளை வழங்குவதற்கு லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.

லங்கா சதொச விசேட விலைக்கழிவுகளைப் பெறுவதற்கு அந்தந்தப் பிரதேசங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தானசாலைகளுக்குத் தேவையான உணவுப் பொருட்களுக்கான முன்பதிவுகளை எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதிக்கு முன்னர் அருகிலுள்ள லங்கா சதொச கிளைக்கு வழங்குமாறு லங்கா சதொச விடுத்துள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறக்காமல் இதையும் படியுங்க   பிரபல பாடசாலையில் போதைப்பொருள்; மாணவர்களின் மோசமான பக்கம் அம்பலம் !
Shares