நோர்வேயில் மர்மமான முறையில் ஈழத்தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தை சேர்ந்த 36 வயதான அரசரத்தினம் துஷ்யந்தன் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 30ஆம் திகதி ஒஸ்லோவை அண்மித்த பகுதியான Myrdammen பகுதியிலுள்ள வீதியில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
கொலை செய்யப்பட்டமைக்கான சாத்தியங்கள் உள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உறுதி செய்யப்படவில்லை என பொலிஸ் விசாரணைக் குழுவின் தலைவர் கெட்டில் லண்ட் தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பான தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.