O/L பரீட்சைக்கு தோற்றிய மாணவன் விபரீத முடிவு

கண்டி – கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்ரிய மாணவர் ஒருவர் வபரீத முடிவால் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜம்புகஹபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன் வத்தேகம கல்வி வலயத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வந்துள்ளார்.

முதல் நாள் வினாத்தாளை எதிர்கொண்ட மாணவன் வீடு திரும்பிய பின்னர் வயரில் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் மாணவன் உயிரை மாய்த்துக் கொண்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மறக்காமல் இதையும் படியுங்க   பிரபல பாடசாலையில் போதைப்பொருள்; மாணவர்களின் மோசமான பக்கம் அம்பலம் !
Shares