கைவிட்ட யாழ். போதனா வைத்தியசாலை; காப்பாற்றிய தமிழ் மருத்துவர்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தை ஒன்றின் சந்திர சிகிற்சைக்கு பெற்றோரிடம் பணம் கேட்ட சம்பவம் குறித்த தகவலை குழந்தையின் தாய் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் முறை வைத்தியர் ஒருவர் தமது குழந்தையை சத்திரசிகிச்சை இன்றி காப்பாற்றியதாகவும் அவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

கைவிட்ட மருத்துவமனை – காப்பாற்றிய தமிழ் மருத்துவர்

ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலிலே குழந்தையில் தாயார் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

குழந்தை வயிற்றில் இருந்த கர்ப்பகாலத்தில் வைத்தியசாலையின் அறிவுறுத்தலின் படி நான் சில மருந்துகளை குடித்தேன். காலில் ஏற்பட்ட தோல் நோய்க்கும் மருந்து குடித்தேன்.

அதன்பின்னர் அறுவை சிகிச்சை மூலமே நான் குழந்தையை பெற்றெடுத்தேன். குழந்தை பிறந்த 11 நாட்களில் மூளை காய்ச்சல் வந்ததால் 21 நாட்கள் வைத்தியசாலையில் இருந்தோம்.

இதன்போது குழந்தையின் தலையை ஸ்கேன் செய்து, முதலில் தலையில் சளி என கூறி பின்னர் ரத்த கசிவு என்றனர். அதன் பின்பு தொடர்ச்சியாக கிளினிக் சென்று குழந்தையின் தலை வளர்ச்சி அளக்கப்பட்டது.

குழந்தையின் தலையில் நீர் கோர்வை இருப்பதாகவும் மூளையிலிருந்து வெளியேற வேண்டிய நீர் தடைபட்டுள்ளதாக தெரிவித்து அதற்கான சத்திரசிகிச்சைக்கு 135000 வைத்தியசாலையில் பணம் கேட்டதாகவும் அந்த தாய் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது சாத்திரசிகிச்சையின் பின்னர் குழந்தை இறந்தால் அதற்கு பெற்றோர்கள் தான் பொறுப்பு என ஈவிரக்கமின்றி கூறியதாகவும் அவர் வேட்க்ஹனை வெளியிட்டார்.

பின்னர் தாம் உரும்பிராயில் உள்ள தமிழ் வைத்தியரிடம் சிகிச்சை பெற்று குழந்தை தற்போது நலமாக உள்ளதாகவும் குழந்தையின் தலை பெருக்கும் வருத்தமும் குறைந்துள்ளதாகவும் தாயார் தெரிவித்துள்ளார்.
தாயின் கர்பகாலத்தில் கொடுக்கப்பட்ட மருந்துகள்

இது தொடர்பில் மருத்துவம் பார்த்த தமிழ் வைத்தியர் கூறுகையில்,

குழந்தை வயிற்றில் இருக்கும் போது தாய்க்கு கொடுத்த மருந்து மற்றும் குழந்தை பிறந்த உடனே தடுப்பூசி செலுத்தியமையே குழந்தையின் அந்த நிலைக்கு காரணம் என கூறியுள்ளார்.

தாய் அருந்திய மருந்தின் தாக்கம் குழந்தையின் சிறுநீரகத்தை பலவீனம் படுத்தியுள்ளதாகவும் அதனால் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு மாத குழந்தையுடன் என்னிடம் வந்தார்கள் இப்போது 6 மாத குழந்தையாக அவர் நலமாக உள்ளார் என தெரிவித்தார்.

எல்லா வருத்தங்களும் கத்தியை எடுத்து சத்திரசிகிச்சை செய்ய கூடாது. பொதுவாக உடல் சார்ந்த நோய்களின் போது அதன் ஆணிவேரை அறிய வேண்டும். அந்த ஆற்றல் நவீன மருத்துவத்திற்கு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பில் அண்மைகாலகங்களாக பல்வேறு சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், அரசாங்க வைத்தியசாலையாக இருந்தும் குழந்தையின் சத்திர சிகிற்சைக்கு பெரும்தொகை பணம் கேட்ட சம்பவம் மக்களிடையே விசனத்தை

Shares