பொதுவாகவே காகத்தை அடிப்படையாக வைத்து சகுனம் பார்க்கப்படுவது தொன்றுதொட்டு ஒரு வழக்கமாக இருக்கின்றது.
புரான இதிகாசங்களின் அடிப்படையில் காகம் என்பது சனி பகவானின் வாகமாகும். காகம் சனிபகவாகின் மற்றொரு உருவமாக பார்ப்படுவதும் வழக்கம்.
அந்த வகையில் காகத்தை பற்றிய அச்சங்கள் இந்துக்களின் மத்தியில் நிலவுகின்றது. காகமானது ஒருவருடைய வீட்டிற்குள் நுழைந்தால் அது வாழ்க்கையில் பல மாற்றங்களை எற்படுத்தும் என இந்து சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
காகம் பற்றிய சில சகுணங்கள் எப்போதும் எதிர்காலம் குறித்து எச்சரிப்பதாகவே பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் எதிர்பாராத விதமாக சாலையில் இறந்த காகத்தை பார்த்தால் என்ன பலன் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
என்ன அர்த்தம்?
இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் காகங்கள் சனிபகவானின் வாகனமாகவும் நமது முன்னோர்களின் அம்சமாகவும் சித்தரிக்கப்படுகின்றது. இதன் காரணமாகவே காகத்துக்கு படையல் வைக்கும் வழக்கமும் கடைப்பிடிக்கப்படுகின்றது.
சாலையில் இறந்த காகத்தை பார்ப்பது கெட்ட சகுனமாகவே கருதப்படுகின்றது. உங்கள் முன்னோர்கள் உங்கள் மீது கடும் கோபத்தில் இருக்கின்றார்கள் என்பதே இதன் அர்த்தம்.
இறந்த காகம் ஒருவரின் மரணத்தை முன்கூட்டியே எச்சரிப்பதாகவும் கருதப்படுகின்றது. சாலையில் இறந்த காகத்தை பார்ப்பது எதிர்காலத்தில் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய இடர் ஏற்பட போகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அல்லது குடும்ப உறுப்பினர் யாராவது கடுமையாக நோயினால் பாதிக்கப்பட கூடும். இதனை அலட்சியப்படுத்த கூடாது.
மேலும் இறந்த காகமானது சனிபகவானின் கோபத்தை வெளிப்படுத்துவதாகவும் பார்க்பப்படுகின்றது. சனியின் தோஷம் இருந்தாலும் இறந்த காகத்தை பார்க்க நேரிடும்.
இப்படி இறந்த காகத்தை நீங்கள் பார்த்தால் உடனடியாக சனி பகவான் கோயிலுக்கு சென்று மன்னிப்பு கேட்டு தீபம் ஏற்றி விடுவது கோபத்தை குறைக்க உதவும். இது முன்னோர்களின் கோபத்தையும் குறைக்கும் என்பது ஐதீகம்.