தந்தை வெளிநாட்டில்; யாழில் தாய் கொலை; 16 வயது மகன் பகீர் வாக்குமூலம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் இளம் தாய் சடலாமாக மீட்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுவனிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தானே தனது தாயின் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்

இதனையடுத்து கைதான சிறுவனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்த நிலையில், சந்தேக நபரான சிறுவன் மனநலம் பாதிக்கப்பட்டவர் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதோடு சிறுவன் தொலைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையானவர் எனவும், அதனால் சிறுவன் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயார் நித்திரை மாத்திரைகளை பாவித்து விட்டு உறக்கத்தில் இருந்த போது, அவரது கழுத்தை நெரித்து கொன்றதாக தெரிவித்தார்.

கொலையின் பின்னர் கொழும்புக்கு பேருந்தில் சென்றதாகவும், அங்கு இறங்கி சிறிது நேரம் உட்கார்ந்திருந்து விட்டு, மறுபடியும் பேருந்தில் ஏறி யாழ்ப்பாணம் வந்து, தெல்லிப்பளை வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் வீட்டுக்கு சென்றபோது, தாயாரின் கண்ணீர் அஞ்சலி பதாதைகள் கட்டப்பட்டிருப்பதை பார்த்து விட்டு, நேராக பொலிஸ் நிலையம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார். சிறுவன் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, அச்சுவேலியிலுள்ள சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
37 வயதுடைய பெண் கொலை

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை (3) வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஹெனடிக் ஜஸ்மின் எனும் 37 வயதுடைய பெண்ணே கொலை செய்யப்பட்டிருந்தார். உயிரிழந்த பெண் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த நிலையில் அவரது கணவன் வெளிநாட்டில் வசித்து வருகின்றார்.

இந்நிலையில் பெண் உயிரிழந்த நிலையில் மகள் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Shares