யாழில் 5 பிள்ளைகளின் தந்தைக்கு நேர்ந்த துயரம் ; சோகத்தில் குடும்பம்

யாழ். புத்தூர் பகுதியில் மரத்தில் இருந்து கீழே விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அருகாமையில் நேற்று(06.05.2024) குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உடற்கூற்று பரிசோதனை

இதன்போது கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து சிவலிங்கம் (வயது 62) என்ற 5 பெண் பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் கீழே விழுந்து உயிரிழந்த பின்னர் அவரது சடலம் அச்சுவேலி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்காக அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

மேலும், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மறக்காமல் இதையும் படியுங்க   பிரபல பாடசாலையில் போதைப்பொருள்; மாணவர்களின் மோசமான பக்கம் அம்பலம் !
Shares