கிரகங்களின் ராஜாவாக இருக்கும் சூரியன் ஜோதிடத்தில் ஒருவரின் ஜாகத்தில் வலுவாக இருந்தால் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் மேல் அதிர்ஷ்டம் ஏற்படும்.
மேஷ ராசியில் இருக்கும் சூரிய பகவான் மே 14, 2024 அன்று ரிஷப ராசிக்கு மாறுகிறார். இந்த பெயர்ச்சியானது மாலை 5.54 மணிக்கு நடைபெறும்.
சூரியனின் இந்த சஞ்சாரத்தால் மேஷம், சிம்மம் உள்ளிட்ட 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் உண்டாவதுடன், சூரியனைப் போன்று பிரகாசிக்கும் ராசியினரை தெரிந்து கொள்வோம்.
மேஷம்:
மேஷ ராசியில் சூரியனின் இந்த சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருப்பதுடன், படிப்பில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். கடனில் இருந்து விடுதலையும், பொருளாதார ஸ்திரத்தன்மையும் ஏற்படும். திடீர் பண வரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். கடின உழைப்பிற்கு வெற்றி நிச்சயம்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இந்த சூரிய சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருப்பதுடன், நம்பிக்கை அதிகரித்து, வேலையில் வெற்றியை அடைவீர்கள். பல நேர்மறையான முடிவுகளை பெறுவதுடன் பதவி உயர்வு மற்றும் சம்பளமும் அதிகரிக்கும்.
கடகம்:
கடக ராசியினருக்கு சூரிய சஞ்சாரத்தால் நிதி ரீதியாக வலுவாக இருப்பதுடன், வியாபாரத்தில் ஆதாயம் கிடைக்கும். வேலையின் மூலம் நிதி பலனை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக கிடைக்காத பணம் நிச்சயம் திரும்பிவரும்.
சிம்மம்:
சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான் என்பதால், இந்த சஞ்சாரம் இவர்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதுடன், வேலையில் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிப்பால், நீங்கள் பல சவால்களை சுலபமாக எதிர்கொள்ள முடியும். மரியாதை அதிகரிப்பதுடன், உத்தியோகத்தில் பதிவி உயர்வும் கிடைக்கும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இந்த சூரிய சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருப்பதுடன் புதிய வேலையும் கிடைக்கும், புதிய தொழில் தொடங்க நல்ல நேரமாக இருப்பதுடன், உங்களது நிதி நெழிப்பாக இருக்கும். மரியாதை அதிகரிக்கும்.