உங்க வாழ்க்கையில் செல்வம் பெருக வேண்டுமா? அட்சய திருதியை அன்று கட்டாயம் இதை செய்யுங்கள்

இந்து சாஸ்திரங்கள் படி, அட்சய திருதியை என்பது வாங்குவதற்கு மட்டுமல்ல, தானம் செய்வதற்கும் சிறந்த நாள். கஷ்டத்தில் இருக்கும், ஏழை மக்களுக்கு அட்சய திருதியை அன்று உங்களால் முடிந்த தானம் செய்யுங்கள்.

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க முடியாதவர்கள், தானம் செய்யலாம். தானம் செய்வதால், நமக்கு மட்டுமல்ல, நம் வருங்கால சந்ததியினருக்கும் நல்ல பலன் கிடைக்கும்

இந்த ஆண்டு மே 10ம் திகதி காலை 4.17 மணிக்கு திரிதியை திதி தொடங்குகிறது. அதேசமயம் மே 11ஆம் திகதி மதியம் 2:50 மணிக்கு முடிவடையும்.

அட்சய திருதியை நாளின் சிறப்பே இந்த நாளில் எந்த காரியத்தை தொடங்கினாலும் அது வெற்றி பெரும் என்பதுதான் என்கிறது ஜோதிடம். செல்வத்தை அள்ளித்தரும் இந்த நன்னாளில் தானங்கள் செய்பவர்களுக்கு புண்ணியம் பல மடங்கு கிடைக்கும்

தண்ணீர் கொடுத்தல்

தண்ணீரை தானமாக வழங்கினால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். ஐந்தறிவு ஜீவராசிகளுக்கு தண்ணீர் கொடுத்து தாகம் போக்கினால் இறையருளை பெறலாம்.

குங்குமத்தை தானமாக வழங்கலாம்

கணவர் நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாக வாழ வேண்டும் என விரும்பும் மனைவிகள் அட்சய திருதியை அன்று குங்குமத்தை தானமாக வழங்கலாம். குடும்ப வாழ்க்கை இதனால் மகிழ்ச்சியாக மாறும். வெல்லம், நெய் மற்றும் உப்பு ஆகியவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுத்தால் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்.

புத்தாடைகள் தானமாக கொடுத்தல்

ஏழை எளியோருக்கு அட்சய திருதியை நாளில் புத்தாடைகள் தானமாக கொடுத்தால் இறைவனின் ஆசியை பெறலாம். செல்வ செழிப்பையும், ஆரோக்கியமான வாழ்வையும் பெற விரும்புவோர் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், சந்தனத்தை தானம் செய்யலாம்.

மறக்காமல் இதையும் படியுங்க   இந்த ராசிக்கு இனி வாழ்க்கையில் மகிழ்ச்சியை அள்ளி தரும் சனி பகவான்
Shares