உங்கள் தொலைபேசி எண்ணில் இந்த நம்பர் அதிகமா இருந்தா அவங்கதான் அதிர்ஷ்டசாலியாம்..!!
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் நியூமராலஜி என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தை பிறந்து பேர் வைப்பதில் தொடங்கி தொழில் ஆரம்பிக்கும் வரைக்கும் இந்த நியூமராலஜி தான் நமது அதிர்ஷ்டத்தை பறைசாற்றுகிறது.இந்த அதிர்ஷ்டமான எண்களைக் கொண்டு நம் அதிர்ஷ்டத்தை நம் பக்கம் திருப்பிக்கலாம்.சரி வாங்க நியூமராலஜி படி நம் அதிர்ஷ்டத்தை எப்படி மாற்றலாம் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

பெரிய எண் அமைந்திருத்தல்எண் கணித வல்லுநர்களின் கருத்துப்படி உங்களுடைய வாய்ப்புகள் அதிகரிக்க, வெற்றிகரமாக தொழிலை தொடங்க உங்கள் மொபைல் எண்ணில் பெரிய எண் அமைந்திருப்பது நல்லது.
எண் 4 மற்றும் 8உங்கள் மொபைல் எண்ணில் 4 ம் 8 ம் காணப்பட்டால் அது கெட்டதன் அடையாளமாக கூறப்படுகிறது. எனவே உங்கள் மொபைல் எண்ணை மாற்றியமைப்பது நல்லது. இதன் மூலம் நேர்மறை ஆற்றலை உங்கள் பக்கம் இழுக்கலாம். உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்கும்.
உங்களுடைய மொபைல் எண்ணில் அதிகமான 4 ம் அதிகமான 8 ம் இருப்பது.உங்கள் மொபைல் எண்ணில் 4 அல்லது 8 அதிகப்பட்சமாக காணப்பட்டால் வாழ்க்கையில் நீங்கள் தீவிர சவால்களை சந்திக்க நேரிடும்.

அதிகமான 6 காணப்பட்டால் அதிர்ஷ்டசாலி நீங்கள் தான்உங்கள் மொபைல் எண்ணில் அதிகமான 6 காணப்பட்டால் நீங்கள் சிறப்பான நம்பிக்கை உடைய நபராகவும், காதல் மற்றும் மற்றவர்களை கவர்ந்திழுப்பதில் தனிநபராகவும் விளங்குவீர்கள்.
எண் 5 மற்றும் எண் 2 அதிர்ஷ்டமின்மைஉங்கள் மொபைல் எண்ணில் எண் 5 ம் 2 ம் திரும்ப திரும்ப இடம் பெற்று இருந்தால் அதிர்ஷ்டமின்மை யை குறிக்கிறது. இது உங்கள் காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

எண் 8 அல்லது 5, 2 மற்றும் 8இந்த 3 எண்களின் கூட்டமைப்பில் உங்கள் மொபைல் எண் அமைந்திருந்தால் மிகுந்த துரதிர்ஷ்டம் எனப்படுகிறது. மன அழுத்தம், மென்டல் டிஸ் ஆர்டர் போன்ற பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே உங்கள் மொபைல் எண்ணை மாற்றியமைப்பது நல்லது.