சனிக்கிழமையில் மறந்தும் கூட இந்த பொருட்களை வாங்காதீர்கள்

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். சனி பகவான் அவரவர் செய்வதற்கு ஏற்ற பலன்களை கொடுப்பதில் சிறந்தவர். அந்தவகையில், சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமைகளில் சில பொருட்களை வாங்குவது சிறந்தது அல்ல. இரும்பு என்பது சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருளாகும். எனவே, இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்கக்கூடாது.

சனிக்கிழமைகளில் எண்ணெய் கடைக்குச் சென்று எண்ணெய் வாங்கக் கூடாது. எண்ணெய் வாங்க சனிக்கிழமை உகந்ததல்ல. மகாலட்சுமி வாசம் செய்யும் உப்பை தப்பி தவறியும் சனிக்கிழமையில் வாங்குவதை நிறுத்தி விடுங்கள். மகாலட்சுமி துடைப்பம் போன்ற பொருட்களில் வாசம் செய்வதால் வீட்டை சுத்தம் செய்யும் பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்கக் கூடாது.

மேலும், சனி பகவானுக்கு உரிய எள் சனிக்கிழமையில் வாங்கக் கூடாத பொருளாகும். சமையலுக்குத் தேவைப்படும் மாவு போன்ற பொருட்களையும் சனிக்கிழமையில் வாங்கக் கூடாது.
வெள்ளிக்கிழமையில் மசாலா பொருட்களை வாங்குவதை மற்றும் அரைப்பதை தவிர்க்க வேண்டும்.

கூர்மையான பொருட்கள், ஆயுதங்கள் போன்றவற்றை சனிக்கிழமைகளில் வாங்கக் கூடாது.ஏனென்னில் தீராத துன்பமும் குடும்பத்தில் பிரச்னைகளும் உண்டாகும். சனிக்கிழமை அன்று புதிய ஆடைகளை வாங்கக் கூடாது. அதேபோல் புதிய ஆடைகளையும் அணியக் கூடாது.

மறக்காமல் இதையும் படியுங்க   இந்த ராசிக்கு இனி வாழ்க்கையில் மகிழ்ச்சியை அள்ளி தரும் சனி பகவான்
Shares