ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி அவரின் எதிர்கால வாழ்க்கையிலும் ஆளுமையிலும் பெரிதும் தாக்கம் செலுத்தும்.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியினருக்கு இயல்பாகவே மற்றவர்களுக்கு உதவும் பண்பு காணப்படும்.
இவர்கள் எப்போதும் பிறருக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியினர் இயல்பாகவே எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். மற்றவர்கள் கஷ்டப்பட்டால் இவர்கள் இலகுவில் மனம் உருகிவிடுவார்கள். இவர்கள் உறவுகளுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் கருணை உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களின் வலியை தங்களுடைய வலியாக உணர்கிறார்கள். எப்போதும் மற்றவர்களுக்கு உதவும் தன்மை
இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
மகரம்
மகர ராசியினர் எப்போதும் உறவுகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். குறிப்பாக நண்பர்கள் யாரேனும் கஷ்டத்தில் இருந்தால் இவர்களால் புறக்கணிக்கவே முடியாது.