முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும், தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர். பெண்கள் விளையாட்டுத்துறையிலும் இப்போது வேற லெவலில் அசத்துகின்றனர்.
அதிலும் அதெலெட்டிக் போன்ற போட்டிகள் தொடங்கி, கிரிக்கெட் வரை சர்வசாதாரணமாக விளையாடி அனைவரையும் ரசிக்க வைக்கின்றனர். ஆணுக்குப் பெண் இளைப்பிள்ளை என பாரதி பாடிய பாடலுக்கு ஏற்ப இப்போது ஆண்களைப் போலவே பெண்களும் விளையாட்டிலும் வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.அதேபோல் இன்று பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சாதித்து அசத்துகின்றனர். அதிலும் நடனம் எப்போதுமே பெண்களின் பேவரட். அதில் அசத்தாமல் விட்டுவிடுவார்களா
அதிலும் இப்போதெல்லாம் திருமண வீடுகளில் மணமக்கள் நடனம் ஆடுவது பெரிய பேஷனே ஆகிவிட்டது. முன்பு தான் மணவறையில் பெண்கள் குனிந்த தலை நிமிராமல் மிகவும் பவ்யமாக இருப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் செம குத்து குத்திவிடுகின்றனர். அந்தவகையில் இங்கேயும் ஒரு திருமண வீட்டில் புல்லட் பாண்டி பாடலை போடுகிறார்கள். அதற்கு செம க்யூட்டாக ஸ்டெப் போட்டு கல்யாணப் பெண் ஆடி அசத்துகிறார். மாப்பிள்ளையோ அதைப் பார்த்து வெட்கத்தில் முகம் சிவக்கிறார். மாப்பிள்ளை கூச்சப்பட்ட்டு நிற்க, மணப்பெண்ணோ பட்டையைக் கிளப்பும் இந்த ஆட்டம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.