பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கர்ப்பமாகிய நிலையில், தற்போது பாக்கியாவிற்கு உண்மை தெரிந்து பயங்கர அதிர்ச்சியில் உறைந்துள்ளார். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.
பாக்கியாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்து வசித்து வருகின்றார். எந்தவொரு பிரச்சினை என்றாலும் அதனை மிகவும் சாமர்த்தியமாக சரி செய்த பாக்கியா தனது தொழிலும் சாதித்து வருகின்றார்.
தற்போது ராதிகா கர்ப்பமாக இருப்பதை வீட்டில் உள்ளவர்களிடம் மறைத்துள்ள நிலையில், பாக்கியாவிற்கு அந்த உண்மை தெரியவந்துள்ளது. நேரடியாகவே ராதிகாவிடம் கேட்ட நிலையில், ராதிகா ஆமாம் என்று பதில் அளித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.