நவ கிரகங்களின் மங்களநாயகனாக விளங்க கூடியவர் குருபகவான் ஆண்டிற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக் கூடியவர்.
குரு பகவான் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
12 ஆண்டுகளுக்குப் பிறகு, மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் குரு ரிஷப ராசியில் பெயர்ச்சி அடைகிறார்.
அதன்படி புதன்கிழமை, மே 1, 2024 அன்று, குருபகவான் ரிஷப ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். பிற்பகல் 1.50 மணிக்கு குரு பெயர்ச்சி நடக்கும்.
இந்த குருபெயர்ச்சியால் குறிப்பிட்ட 6 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் பெருகப்போகின்றன.
மேஷம்
சுப பலனைத் தரும், நிதி ஆதாயம் மற்றும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும், சுப காரியங்களுக்கான செலவுகள் ஏற்படலாம், மிகவும் பிரபலமான நபர்களுடன் தொடர்பு அதிகரிக்கும், இதனால் புதிய லாபகரமான வழிகள் மற்றும் திட்டங்கள் உருவாகும்.
ரிஷபம்
அதிக பலன்களைப் பெறப் போகிறார்கள். இந்த காலகட்டத்தில் மீடியா மற்றும் கிராஃபிக்ஸ் பணி செய்பவர்கள் பயனடைவார்கள். வருமானம் கூடும். திருமண வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். இருப்பினும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பப் பொறுப்புகளை சுமுகமாக நிறைவேற்றுவீர்கள்.
மிதுனம்
நம்பிக்கை அதிகரிக்கும், ஆனால் மனதில் ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். அதிக ஆர்வத்துடன் இருப்பதை தவிர்க்கவும். வியாபாரத்தில் விழிப்புடன் இருங்கள். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.
சிம்மம்
குரு ராசி மாற்றம் அற்புதமாக அமையும். இந்த நேரத்தில், உங்கள் இனிமையான பேச்சின் மூலம் முன்னேற்றம் அடைவீர்கள். உத்தியோகத்தில் வளர்ச்சி இருக்கும், சம்பளம் மற்றும் பதவி உயர்வு கூடும்.
துலாம்
குரு பெயர்ச்சியால் நல்ல பலன் கிடைக்கும். வேலையில் வெற்றி பெறுவீர்கள். பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் கிடைக்கலாம். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். வீட்டிற்கு புதிய விருந்தினர் வருகை தரலாம்.
மீனம்
பல வழிகளில் இருந்து நன்மை தரும். தொழிலில் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்திற்கு இந்த வருடம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். காதல் திருமணம் செய்துக் கொள்ளலாம்.