சனி பகவான் என்றாலே பயம் தான்.ஆனால் அவரே ஒருவரை பார்த்து பயப்படுகிறார்.அவர் யார் என்பதை பற்றி பார்ப்போம்.
ஜாதகத்தில் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டு துன்பப்படுபவர்கள் விநாயகரை வழிபட்டால்,விநாயகர் பார்த்து கொள்வார்.. இதற்கு ஒரு புராணக் கதை கூறப்படுகிறது.
ஒரு சமயம் ஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் நிஷ்டையில் இருந்த விநாயகர், தன்னைப் பிடிப்பதற்காக சனி பகவான் வருவதை அறிந்து கொண்டு சனி பகவான் வந்ததும் ஒரு தலைச்சுவடியை அவரிடம் நீட்டினார். அதில், ‘இன்று போய் நாளை வா’ என்று எழுதி இருந்தது.
பின்னர் விநாயகர் அதை அரச மரத்தடியில் வைத்தார். பின்பு சனி பகவானிடம், “சனீஸ்வரா, எந்த நாளும் இந்த அரச மரத்திற்கு வருக. இந்த ஓலைச்சுவடியில் என்ன எழுதி இருக்கிறதோ அதன்படி நடப்பாயாக” என்று சபித்து விட்டு மறைந்து விட்டார்.
அதன்படி சனி பகவான் தினமும் அந்த அரச மரத்தடிக்கு சென்று அதில் உள்ள வாசகத்தை படித்து ஏமாற்றம் கண்டு திரும்புவது வழக்கமானது.
இப்படி பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஏமாற்றம் அடைந்து கொண்ட சனி பகவான், ஒரு நாள் விநாயகரை பிடிப்பது என்பது முடியாத காரியம் என்று உணர்ந்து அவரை துதித்து வழிபட தொடங்கினார். விநாயகரும் அவர் முன் தோன்றி, “சனீஸ்வரா காரணமின்றி உனது சக்தியை பயன்படுத்தி தவறாக என்றும் செயல்படக்கூடாது . இதற்கு உன் அனுபவம் ஒரு படிப்பினையாகட்டும்.
இன்று முதல் என்னை வணங்கும் பக்தர்களையும் நீ பிடித்து துன்புறுத்தக் கூடாது” என்று கூறி அவருக்கு ஆசி அளித்து மறைந்தார்.
இதன்படியே இன்றும் சனி தோஷம் உள்ளவர்கள் விநாயகரை அவருக்கு உகந்த நாட்களான சங்கடஹர சதுர்த்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி இன்னும் பிற நாட்களிலும் வணங்கி வர, சனி தோஷத்தில் இருந்து முற்றிலும் விடுபடுகிறார்கள் என நம்பப்படுகிறது .
ஆதலால் ,விநாயகப்பெருமானை வழிபடுபவர்களை சனி பிடிக்காதது மட்டுமல்ல, சனியின் கெடுபலன்களையும் குறைத்து அருள்புரிகிறார்.