செல்வ செழிப்புடன் வாழ ஷமி மரத்தை எப்படி வளர்க்க வேண்டும்?

ஜோதிடத்தை பொறுத்தளவில் நம்மை சுற்றியுள்ள இலை, செடி, கொடி மற்றும் மரங்கள் பல வழியில் வாழ்க்கையில் தொடர்புப்பட்டு வருகிறது.

தாவரங்களின் புனிதத்தைப் பற்றி நாம் பேசும்போது, ​​​​ஷமி என்பது சனி தேவரைப் பிரியப்படுத்த பயன்படுத்தும் தாவரமாகும்.

மேலும் இது சிவபெருமானுக்கு மிகவும் பிடித்த தாவரமாகவும் கருதப்படுகிறது. இதை எப்படி செல்வ செழிப்புடன் வாழ பயன்படுத்தலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
எந்த ராசிக்காரர்கள் நடலாம்?

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தைரியம், லட்சியம் மற்றும் எப்போதும் முன்னோக்கி நிற்கும் இயல்பைக் கொண்டவர்கள்.

எனவே நீங்கள் வீட்டில் ஒரு ஷமி செடியை நட்டு, அதை தொடர்ந்து கவனித்து வந்தால், அது உங்கள் தலைமைப் பண்புகளை அதிகரித்து வாழ்க்கையில் நல்ல பலனை தரும்.

செல்வ செழிப்புடன் வாழ ஷமி மரத்தை எப்படி வளர்க்க வேண்டும்? | Shami Tree For Prosperity

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதியாக சூரியன் கருதப்படுகிறார். சிம்ம ராசியில் தன்னம்பிக்கையின் போக்கு தெளிவாகத் தெரியும். சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் லட்சியம், அங்கீகாரம் மற்றும் வெற்றிக்கு முன்னுரிமை வழங்குவார்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் ஷமி செடியை நடுவது அவர்களின் இயற்கையான அழகை அதிகரிக்கும். சிம்ம ராசிக்காரர்கள் ஷமி மரத்தை நட்டால் சனி மற்றும் சூரிய பகவானின் ஆசீர்வாதம் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் நம்பிக்கை மற்றும் ஞானம் நிறைந்தவர்கள்.

தங்கள் புகழை அதிகரிக்கும் செயல்களில் எப்போதும் ஈடுப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். நீங்கள் ஷாமி செடியை நட்டால் உங்கள் வாழ்வில் செல்வம் அதிகரிக்கும்.

நீங்கள் வீட்டில் ஷமி செடியை நட்டால், அது உங்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் பெரும்பாலும் முற்போக்கான யோசனைகளை தேர்ந்தெடுப்பார்கள்.

கும்ப ராசிக்காரர்களுக்கு, ஷமி மரம் நடுவது அவர்களின் குடும்பம் செழிப்புடன் வாழ உதவும். சனி கும்ப ராசியில் இருப்பதும் ஷமி செடியை நடுவதன் மூலமும் சனிபகவானின் சிறப்பு ஆசீர்வாதம் உங்கள் வீட்டில் இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் ஷமி மரத்தை நடுவது பல வகையில் அவர்களுக்கு உதவுகிறது. இந்த செடியை உங்கள் வீட்டில் நட்டு பராமரித்தால், சனியின் ஆட்டத்தில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.

மறக்காமல் இதையும் படியுங்க   இம்மாதத்தில் உருவாகும் முதல் குரு பெயர்ச்சி- ரிஷப ராசி முதல் அதிர்ஷ்டத்தை அள்ளும் மற்றைய ராசிகள்
Shares