ஒரே குடும்பத்தில் 350 வாக்காளர்கள்.., அப்பாவுக்கு 5 மனைவிகள், மகனுக்கு 3 மனைவிகள்

வரும் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 350 வாக்காளர்கள் தேர்வாகியுள்ளார்.

இந்திய மாநிலமான அசாம், சோனித்பூர் மாவட்டத்தில் புலோகுரி நேபாளி பாம் நகரில் ரான் பகதூர் தபா என்பவரின் குடும்பம் வசித்து வருகிறது. இவர், 1997 -ம் ஆண்டில் காலமானார்.

இவரது குடும்பம் வசிக்கும் சோனித்பூர் மாவட்டமானது ரங்கப்பாரா சட்டப்பேரவை தொகுதி மற்றும் சோனித்பூர் மக்களவைத் தொகுதிக்குள் வருகிறது.

இவரது குடும்பத்தில் மொத்தம் இருக்கும் 1200 பேரில் 350 பேர் வாக்களிப்பதற்காக தேர்வாகியுள்ளனர். தற்போது இந்த செய்தி வைரலாக பேசப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக ரான் பகதூரின் மகன் டில் பகதூர் தாபா செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களது குடும்பத்தில் மொத்தம் 350 வாக்காளர்கள் இருக்கின்றனர். எனது தந்தை 1964 -ம் ஆண்டில் என் தாத்தாவுடன் இங்கு குடியேறினார். என் தந்தைக்கு 5 மனைவிகள், எனக்கு 12 சகோதரர்கள் மற்றும் 9 சகோதரிகள் உள்ளனர்.

என் பிள்ளைகள் உயர்கல்வி படித்திருந்தாலும் அரசு வேலை கிடைக்கவில்லை. சிலர் தினக்கூலிகளாக வேலை செய்கிறார்கள். எனக்கு 3 மனைவிகள் மற்றும் 12 குழந்தைகள் உள்ளனர்” என்றார்.

அசாமில் உள்ள 14 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 19, ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய திகதிகளில் தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மறக்காமல் இதையும் படியுங்க   மைம் கோபி வெளியிட்ட கடைசி உரையாடல் இது தான்
Shares