அம்மாக்கள், மகன்களிடம் ரொம்ப பாசம் காட்டுவது போல், அப்பாக்கள் மகள்களிடம் கூடுதலாகவே பாசம் வைத்திருப்பார்கள். மகள்களின் திருமண காலத்தில் தந்தைகளின் உட்சபட்ச பாசம் வெளிப்படுவதைப் பார்க்க முடியும். அப்பா_மகள் உறவின் மேன்மையை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது. அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
பாசம் என்பது உறவுகள் மீது செலுத்தப்படும் உன்னதமான அன்பு.அதிலும் தந்தை_மகள் பாசம் அளவிடவே முடியாது. காரணம் பெண்குழந்தைகள் வளர்ந்ததும் பெற்றோரை அவ்வளவு பொறுப்பாக பார்த்துக் கொள்வதுதான். இங்கேயும் அப்படித்தான். தன் மகள்மீது, ஒரு தந்தை பாசமாக இருக்கிறார். மகளோ தன் தந்தையின் மீது உயிரையே வைத்திருக்கிறார். இந்நிலையில் மகளுக்கு திருமணம் முடிகிறது. அந்தப் பிரிவை தந்தையால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. மகளோ, தினமும் அவர்தான் அப்பாவுக்கு சட்டையில் பட்டன் மாட்டிவிடுவார்.
அதேபோல் அன்றைய திருமணம் முடிந்ததும் கூட வழக்கம்போல் தன் அப்பாவுக்கு சட்டை பட்டனை போட்டுவிட்டுக் கொண்டே பேசுகிறார். ஆனால் அப்பாவோ, மகளின் பிரிவைத் தாங்கமுடியாமல் அழுதபடியே சென்றுவிடுகிறார். குறித்த இந்தக் காட்சி இணையத்தில் தீயாக பரவிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.