குரோதி தமிழ் புத்தாண்டு: எந்த தெய்வத்தை வழிபட வேண்டும்?

வருகிற 14ம் திகதி தமிழ் புத்தாண்டான குரோதி ஆண்டு பிறக்கிறது, தமிழ் ஆண்டுகளில் 38வது ஆண்டாக பிறக்கிறது.

பிறக்கும் முன்னரே பலருக்கும் பயம் உருவாகியுள்ளது, இதற்கு காரணம் மழை குறைவாக இருக்கும் என்றும், அதிகமாக திருடு போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் கடவுளை மனதார வணங்குவதன் மூலம் இதற்கான தீர்வை பெறலாம்.

அன்றைய தினம் பூஜை செய்வதற்கான நேரம் காலை 7.50 முதல் 9 மணி வரை ஆகும்.,

வீட்டை நன்றாக சுத்தம்செய்துவிட்டு அதிகாலையிலேயே வீட்டில் விளக்கேற்றி உங்களது குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் மனதார வணங்குங்கள்.

அருகிலுள்ள கோயிலுக்கு சென்று பூஜையில் கலந்து கொள்வது மனதின் எண்ணங்களை ஒருங்கிணைக்கும்.
வழிபாட்டு முறை

குரோதி ஆண்டிற்கான ராஜா செவ்வாய் என்பதால் தான் தீயினால் பிரச்சனைகள் அதிகம் வரும் என கூறப்படுகிறது, ஏனெனில் செவ்வாய் என்றாலே சூடு.

இதற்கு மந்திரியாக வருபவர் சனீஸ்வரர், செவ்வாய்- சனீஸ்வரர் என்பதாலேயே குரோதி ஆண்டின் தொடக்கம் முதலே அனைவருக்கும் பயம் தொற்றிக்கொண்டு விட்டது.

எனவே செவ்வாயின் ராஜாவான முருகன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள், சிவவழிபாடு மேற்கொள்ளலாம், சனீஸ்வரனால் பிரச்சனை வராமல் இருக்க ஆஞ்சநேயரை வணங்க வேண்டும்.

விபத்து போன்ற பயம் நீங்க பைரவரையும், நரசிம்ம மூர்த்தி வழிபாட்டையும் செய்திடுங்கள்.

மனதின் கவலைகள் நீங்கி இறைவன் மீதான நம்பிக்கையுடன் புத்தாண்டை இனிதே வரவேற்திடுங்கள்!!!

மறக்காமல் இதையும் படியுங்க  2025 ராசி பலன்: ஆரோக்கியத்தில் பாதிப்பை சந்திக்கப்போகும் 3 ராசியினர்... உங்க ராசி இருந்தா ஜாக்கிரதை
Shares