புதன் உருவாக்கும் தரித்திர யோகம்! மோசமான சம்பவங்களை சந்திக்கும் 3 ராசியினர்

ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்திற்கும் சில ராசியினருக்கு நன்மையையும், சில ராசியினருக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும். கிரக மாற்றங்களால் பெரும்பாலும் உடல்நலம், சொத்து, வேலை, குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன. கிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன் கிரகம் சில தருணங்களில் எதிர்பாராத பாதகமான மாற்றங்களை கொடுக்கின்றது.

இந்த புதனின் பெயர்ச்சி கடுமையான நிதி இழப்பு மற்றும் பல மோசமான மாற்றங்களை ஏற்படுத்தலாம். புதன் கடந்த 9-ம் தேதி மீன ராசிக்கு சென்றுள்ளார். இதனால் சில ராசிகளில் தரித்திரயோகம் உருவாகியுள்ள நிலையில், மிகவும் கவனமாக இருக்க வேண்டிய ராசியினரை குறித்து தெரிந்து கொள்வோம்.

தரித்திரயோகம் என்றால் என்ன?

ஜாதகத்தில் லக்னாதிபதியும் ராகுவும் கூடி கடக ராசியில் அல்லது சந்திரனுடன் வேறு ராசிகளில் அமர்ந்தால் தரித்திரயோகம் உருவாகும். இந்த காலத்தில் வறுமை காணப்படுவதுடன், தடைபடாத வாழ்வில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கின்றது. தீராத கடன்களும் உண்டாவதுடன், திருமண தோல்வி, பொருளாதார பாதிப்பையும் சந்திக்க நேரிடும்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு இந்த புதன் பெயர்ச்சி சில அசௌகரியங்களைத் தருவதுடன், பிரச்சினைகளின் தீவிரம் அதிகரித்து நெருக்கடியும் அதிகமாகும். தொழில் தொடர்பான பிரச்சினை, உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். தந்தையின் உடல்நிலையில் அதிக கவனம் தேவை.

கன்னி

கன்னி ராசியினருக்கு புதன் பெயர்ச்சி பல மோசமான பலன்களைத் தரும். உங்கள் நாட்களை தினமும் மோசமான சம்பவங்களுடன் தொடங்க வேண்டியிருக்கும். ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கப்படும். வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் அலட்சியமாக இருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பல விஷயங்களில் சக பணியாளர்களுடனும், மேலதிகாரிகளுடனும் கருத்து வேறுபாடுகள் வரலாம். இந்த நேரத்தில் புதிய வேலையைத் தேடுவது நல்லதல்ல.. அது உங்களுக்கு அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தனுசு

புதன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு பல சாதகமற்ற நிலைமைகளை உருவாக்குகிறது. பெரும்பாலும் துணையின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் கூட உங்களில் எதிர்மறையான மாற்றங்களோடுதான் வரும். பாதங்கள் மற்றும் தோல் போன்ற பாகங்கள் பெரும்பாலும் மோசமான நிலைமைகளை ஏற்படுத்தும். மன இறுக்கம் அதிகரித்து அதன் மூலம் வாழ்க்கையில் நெருக்கடிகள் ஏற்படலாம். கடன் கொடுப்பதில் கவனமாக இருக்கவும். ஏனென்றால் அது உங்கள் வாழ்க்கையில் மேலும் சவால்களையும் கடமைகளையும் ஏற்படுத்தலாம்.

மறக்காமல் இதையும் படியுங்க   கேந்திர திரிகோண ராஜயோகம்: செப்டம்பர் மாதம் முதல் அதிர்ஷ்டம் பெருகப் போகும் ராசிகள்
Shares