பிரபல நடிகர் மாரடைப்பால் திடீர் மரணம்… பிரபலங்கள் இரங்கல்

பிரபல நடிகரும், அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளருமான அருள்மணி மாரடைப்பினால் காலமானார். இவருக்கு 65 வயதாகும் நிலையில், ஒரு மனைவி மற்றும் ஒரு மகளும் உள்ளனர்.
நடிகர் அருள்மணி

நடிகர் அருள்மணி அழகி, தென்றல், தாண்டவக்கோனே என பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ஆவார்.

இயக்குனர் பயிற்சியையும் செய்து வந்த இவர், அரசியல் மீது ஏற்பட்ட ஆர்வத்தில் கட்சியில் இணைந்த அவர், அதிமுகவில் தீவிரமாக கழகப்பணியாற்றினார்.

நட்சத்திர பேச்சாளரான இவர், கடந்த 10 நாட்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு, நேற்று சென்னை திரும்பியுள்ளார்.

வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இவருக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவு 9.30 மணிக்கு உயிரிழந்துள்ளார்.

அருள்மணியின் மறைவியிற்கு அரசியல் கட்சியினர், திரையுலகினர் தங்களது இரங்களை தெரிவித்துள்ளனர்.

கடைசி புகைப்படம்

இதனிடையே, அருள்மணியின் கடைசி போட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

4 நாளைக்கு முன்புதான், திருச்சியில் நடைபெற்ற எடப்பாடியார் பொதுக்கூட்டத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

குறித்த புகைப்படத்தில் நடிகர்கள் சிங்கமுத்து, அருள்மணி, இயக்குனர்கள் மனோஜ் குமார், நாஞ்சில் பி.சி.அன்பழகன் ஆகியோர் உள்ளனர்.

அதிமுகவினர் இந்த போட்டோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

மறக்காமல் இதையும் படியுங்க   மைம் கோபி வெளியிட்ட கடைசி உரையாடல் இது தான்
Shares