போக்குவரத்து விதிமீறல் ; கையூட்டல் பெற்ற 2 அதிகாரிகள் கைது

களுத்துறை இத்தேபான – போக்குவரத்து விதிமீறல்களை மூடி மறைத்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

தலைக்கவசம் அணியாத மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது வந்த சாரதியையும் பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.

எவ்வாறாயினும், இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதனை பொலிஸ் நிலையத்தில் பெற்றுக்கொள்ள முற்பட்ட வேளையில், 2000 ரூபாவை பெற்றுக்கொள்ள முற்பட்ட போதே கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

Shares